Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு பெண்ணும் தங்களது துணைவரின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில் தவறுவதில்லை. தங்களது கணவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றே ஒவ்வொரு துனைவியரும் எண்ணுவர்.
இன்றைய நாகரீக உலகில் முறையான உணவுப் பழக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு உற்பத்தி மற்றும் வேலைப் பளு போன்ற பல காரணங்களால் மனிதர்களின் உடலில் நோய்கள் அதிகரித்துக்காணப்படுகின்றன.
இந்நிலையில் 80 சதவீதமான பெண்கள் தங்களுடைய கணவரின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை குறித்து பெரிதும் கவலையடைந்து வருவதாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அறியப்பட்டுள்ளது.
தமது துணைவர்களின் அலுவலகங்களில் நீண்டநேர பளுமிகுந்த வேலை, உறக்கமின்மை, போதிய உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுகளை உட்கொள்ளல் போன்றன மனைவிமார்களின் பிரதான கவலைக்குரிய விடயங்களாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களது அலுவலகங்களில் தங்களது கணவர்மார்களுக்கு அதிகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர். நாளில் ஒரு வீத பெண்கள் கொழுப்பு மிக்க உணவுகளை தமது ஆண்கள் அதிகமாக உட்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வானது காப்புறுதி நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்குற்றிய 300 பெண்களில் 50 வீதமானவர்கள் அவர்களது துணைவர்கள் பெருத்த தொந்தியுடைவர்களாக காணப்படுவதால் தாம் கவலையடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
37 வீதமானவர்கள் தங்களது கணவனின் அதிக நிறைக் காரணமாக கவலையடைவதாக தெரிவித்துள்ளனர்.
மேற்படி நிறுவனத்தன் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பெரும்பான்மையான பெண்கள் தமது கணவர்மார்களின் உடற்பயிற்சி முதல் சமநிலையான வாழ்க்கை வரை கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
31 சதவீதமான பெண்கள் தங்களது கணவர்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லையென தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமற்ற முறையில் தொழில் புரிவதாக அதிக எண்ணிக்கையான பெண்கள் விமர்சித்துள்ளனர்.
பத்து சதவீதமான பெண்கள் தமது கணவன்மார்கள் அலுவலக வேலைகளை வீட்டிலும் வந்து செய்வதால் கணவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
26 வீதமான ஆண்கள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை உண்பதாகவும், 23 சத வீதமானவர் முறையான நித்திரை கொள்வதில்லை எனவும், 19 சதவீதமானோர் உணவை புறக்கணிப்பதாகவும் மேலும் 19 சதவீதமானோர் அதிகமாக மது அருந்துவதாகவும் அவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago