2025 ஜூலை 16, புதன்கிழமை

உறக்கத்திலும் கால் அசைப்பது இதய நோய்களுக்கான அறிகுறியாகலாம்: மருத்துவ ஆய்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நித்திரை கொள்வதற்கென சில நியதிகள் உண்டு. பொதுவாக எம்மில் அநேகமானவர்கள் கால்களை அசைத்தவாறு உறங்குவதையே தமது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது அது அவர்களுக்கு சௌகரியமாக அமைந்தாலும் அதுவே பல நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அடிக்கடி கால்களை அசைத்தவாறு உறங்குபவர்களுக்கு தடிப்பான இதயத்தை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இது இதய நோய்கள், மயக்கம், மற்றும் மரணம் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைகின்றது என அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள மயோ மருந்தக வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

'இது காரணமும், அதற்கான விளைவும் எனவும்  நாம் கூறவில்லை. ஆனால், நித்திரையிலும் கூட கால்களை அசைத்துக்கொண்டேயிருப்பது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.   வைத்தியர்களும் நோயாளர்களும் இதனை தங்களது கவனத்தில் கொள்ள வேண்டும்' என  மயோ மருந்தகத்தின் வைத்தியர் அர்ஷாத் ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இதய நோயியல் கல்லூரியில் அண்மையில் நடந்த மாநாடொன்றில் இந்த ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.

'ஓய்வில்லா கால்கள்' நோயினால் மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதப்படுகிறது. எனினும் அவர்களது எண்ணிக்கை குறித்து விவாதம் உள்ளது. சில வைத்தியர்கள் மருந்துகள், சிகிச்சைகளின் விற்பனைக்காக இவ்விடயத்தை மிகைப்படுத்தி கூறுவதாக கருதுகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு இந்த நோய்க்கு விஞ்ஞான ரீதியான முக்கியத்துவம் கிடைத்தது. பல மரபணுக்கள் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டன. ஏனைய வகையான தவறான நித்திரைக் கொள்ளல் முறைகளால் இதய நோய்கள் ஏற்படுகின்றன என்பதை நீண்டகாலமாக வைத்தியர்களும் அறிந்து வைத்திருந்தனர்.

புதிய ஆய்வுத் தகவலும் இந்த விடயம் உண்மையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கிறது.

584 பேர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் இரவில் தங்கவைக்கப்பட்டு உறங்கும் போது அவர்களின் இதயத்தின் துடிப்பு அளவிடப்பட்டது.அதன் பின்பு அவர்களின் கால் அசைவின் தன்மைக்கு ஏற்ப அவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டார்கள்.

அவர்களில் தடிப்பான இதயத்தை கொண்டிருக்க கூடியவர்கள் எனக் கருதப்பட்ட 45 சதவீதமானோர் ஒரு மணித்தியாலத்திற்கு குறைந்தபட்சம் 35 தடவைகள் கால்களை  அசைத்தனர். மீதம் 55 சத வீதமானவர்கள் குறைந்த தடவைகளே கால்களை அசைத்தனர்.

அதையடுத்து 3 வருடங்களுக்கு பின்னர், மேற்படி பங்குப்பற்றுனர்கள் நிலை மீண்டும் ஆராயப்பட்டது. இதில் தடிப்பான இதயம் கொண்டவர்களில் அதிகமானோர் - சுமார் 25 சதவீதமானோர் - இரு மடங்கு அதிகமாக இதய நோய்களுக்கு ஆளாகியிருநத்னர் அல்லது உயிரழந்திருந்தனர் என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வுக்கு அமெரிக்க தேசிய இதய, நுரையிரல் மற்றும் குருதி ஆராய்ச்சி நிலையம் மற்றும் தனியார் தனியார் துறையினர் நிதி வழங்கியிருந்தனர்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 13 April 2011 09:12 PM

    தூங்குவது போல் நடிக்கும் பிள்ளைகளுக்கு சொல்வார்கள்: நன்றாகத்தூங்கும் பிள்ளையின் வலது கால் வலது பெருவிரல் அசையும் என்று உடனே தூங்குவது போல் பாசாங்கு செய்யும் பிள்ளை கால் கட்டைவிரலை அசைக்கும்! எல்லாருமாக சேர்ந்து சிரி சிரி என்று சிரித்து அந்தப் பிள்ளையை எழுப்பி விடுவார்கள்.

    இப்போது அவ்வாறான நிகழ்ச்சி ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தைக் குறிக்கிறது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X