Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 20 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விடயங்களை தமக்காக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் ஆண்களின் செயற்பாடுகள் அமையும் போது பெண்களின் மகிழ்விற்கு அளவேயிருப்பதில்லை. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணான விடயங்கள் நடைபெறும்போதுதான் குடும்ப வாழ்வில் பூகம்பங்கள் எழுகின்றன.
பெண்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் அனைத்தையும் அவர்கள் சார்ந்த ஆண்களால் செய்ய முடியாதபோதிலும் செய்யக் கூடிய விடயங்களையாவது நிறைவேற்றினால் அது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு வேர் விடுகின்றது என்பதை ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
சரி, ஆண்களிடமிருந்து பெண்கள் பொதுவாக எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன?
* பெண்கள் ஏதேனும் ஒரு விடயம் குறித்து ஆண்களிடம் மனம் விட்டு பேசும்போது அதை ஆண்கள் மிக கவனமாக கேட்டுக் கொண்டிருப்பதை விரும்புகின்றார்கள். இவ்வாறு கேட்டுகொண்டு அதற்கு ஏற்றாற்போல நடந்துகொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்துக் கொண்டதாக பெண்கள் நினைக்கின்றார்கள்.
* பெண்களின் கோப, எதிர்மறையான எல்லா உணர்வுகளும் அவர்களின் மாதவிடாய் காலத்துடன் தொடர்பானவை அல்ல என்பதை புரிந்துகொள்பவர்களாக ஆண்கள் இருக்க வேண்டும்.
* ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. ஆனால் அதற்காக கண்ணீர்விட்டு அழ வேண்டும் என்பதில்லை. தனது துணையுடன் மேலும் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும்.
* பெண்களைப் பொறுத்தவரை தொடர்பாடாலானது முக்கியமானது. அதனால் அடிக்கடி பெண்களிடம் பேச வேண்டும்.
* தனது கணவர் ஒரு மாதத்திற்கு ஒருதடவையேனும் தமக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என பெண்கள் விரும்புவர். இது பொதுவாக வழக்கத்துக்கு மாறானதுதான். ஆனால், இவ்வாறான ஆச்சர்ய மூட்டும் விடயங்களினால் ஆண்களிடம் பெண்கள் அதிகம் விருப்பத்துக்குரியவர்களாக மாறுகின்றார்கள். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகள் பெண்களை மகிழ்ச்சியடைய செய்கின்றன.
* ஆண்களே, உங்கள் துணிச்சல் நீங்கள் வாகனம் செலுத்தும் வேகத்தில்தான் தெரிய வேண்டும் என்றில்லை. தாறுமாறாக ஒழுங்கீனமாக வாகனம் செலுத்தும் போது பெண்களை அதிகமாக தாக்குகிறது. அதனால் மிகவும் மிருதுவாதாக வாகனத்தை செலுத்துங்கள்.
* பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள். ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.
* தமது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புகின்றார்கள். ஆண்களை விட்டு பெண்கள் நீங்கும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
* ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது. ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதையே பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.
* வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ஆண்களிடமிருந்து பெண்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள்.
* விடுமுறை நாட்களில் கணவர் வீடுகளில் இருக்கும்போது வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்வதை பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.
p.sivakumar Tuesday, 21 August 2012 07:02 PM
நல்ல கருத்து.
Reply : 0 0
MRPMS Thursday, 21 July 2016 09:04 PM
தகவலுக்கு நன்றி...
Reply : 0 0
Nynirojh Tuesday, 26 January 2016 06:35 PM
அடிவாங்கி சாக போறாளயள்
Reply : 0 0
jai sai Friday, 23 May 2014 04:53 PM
ஆமாம் என் செல்லம்..
Reply : 0 0
jai sai Friday, 23 May 2014 04:50 PM
கண்டிப்பாக அன்பை தருவோம். அன்பே வா...
Reply : 0 0
lakshmi Friday, 14 February 2014 07:18 AM
நான் நல்லா புரிந்துகொண்டேன் நன்றி...
Reply : 0 0
Suresh Tuesday, 31 December 2013 04:53 AM
மிகவும் நல்ல கருத்து.
Reply : 0 0
sangili Wednesday, 18 December 2013 06:20 PM
போதும் போதும் உங்கள் உபதேசம்
Reply : 0 0
karthik raja Monday, 14 October 2013 06:25 AM
மனைவி என்பவள்
கணவனின் இரண்டாம் தாய்
கணவன் என்பவன் மனைவிக்கு
முதல் குழந்தை
Reply : 0 0
suja Thursday, 28 March 2013 05:36 AM
கணவனுக்கு மனைவி குழந்தை, மனைவிக்கு கணவன் குழந்ததை என்று 2 பேரும் நினைத்தாலே போதும். இதெல்லாம் தானா நடக்கும் லைஃப் உம் சந்தோசமா இருக்கும்.
Reply : 0 0
sanofar Saturday, 23 March 2013 05:24 PM
உங்களது கருத்து மிகவும் சரியானது. உங்களது மனது மிகவும் சரியானநிலையில் உள்ளது. உங்களது மனைவி கொடுத்து வைத்தவர் ராஜா
Reply : 0 0
Thilak Thursday, 21 April 2011 08:36 PM
அப்படியா? இனி ஆண்கள் நாங்கள் இதன்படி நடக்கிறோம்.
Reply : 0 0
farhan Friday, 01 June 2012 08:19 AM
அன்பு அன்பு அன்பு
Reply : 0 0
sujivan Monday, 20 February 2012 02:56 AM
neenga sonathu sari. aanal romba over.
Reply : 0 0
raja Monday, 06 February 2012 06:33 PM
உள்ளது உள்ளபடியே கொடுக்கப்பட்டுள்ளது எதுவும் தவறில்லை. ஏற்றுக்கொள்ளும் மனநிலை தான் ஆண்களுக்கு வேண்டும். நன்றியோடு இரு என்றால் நாயாய் இரு என்று அர்த்தம் கிடையாது. புரிதல் தான் முக்கியம். மனைவி என்பவள் நமது உயிர்ச்சத்து போன்றவள், நம்முடன் இருப்பவள் நமக்காய் வாழ்பவள், அவளுடைய சிறிய எதிர்பார்புகளை கூடட செய்ய இயலவில்லை என்றாலும் அவளின் மனம் புண்படாமல் நடந்து கொண்டாலே போதும், அவளும் நமது குணமறிந்து செயல்படுவாள். நம்மில் பலர் மனைவியை ஒரு மனுசியாக கூட ஏற்றுகொள்வது கிடையாத நிலையில் தான் அவ்வளவு பிரச்சனைகளும் ,
Reply : 0 0
SHAJAHAN Saturday, 28 January 2012 01:17 PM
இது ரொம்ப அதிகம்
Reply : 0 0
nisha Saturday, 28 January 2012 02:36 AM
UNMAIJA THANEE SOLLIJIRUGANGA
Reply : 0 0
rama Monday, 23 January 2012 09:26 PM
சரியாக சொன்னீர்கள். பெண்களின் மனநிலை குறித்து அப்படியே சொன்னீர்கள்.
Reply : 0 0
fara Monday, 16 May 2011 03:42 AM
enthe karuthukaill ellam sariyanathu. annkalai pankaill yarum naiy matheri irukka solla villa. nangall pangall ungall anpukkaha enkuhirom athu ungaluku puriya villaya.
Reply : 0 0
wiki Friday, 13 May 2011 02:23 PM
இது மேல் நடப்பதற்கு சொல்பட்டு = கிட்டதட்ட நாய் மாதிரி
Reply : 0 0
xlntgson Thursday, 21 April 2011 09:52 PM
ஆண்களிடம் இல்லாததை எல்லாம் பெண்கள் எதிர்பார்ப்பர், மீசை மாதிரி. ஆனால் பணம் ஆண்தான் கொடுக்க வேண்டுமாம், இது எப்படி இருக்குது?
(நான், திருமணத்துக்கு முன் கொடுக்கும் வரதட்சனை போன்ற விடயங்களை குறிப்பிடவில்லை)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago