2025 ஜூலை 16, புதன்கிழமை

ஆபாசப்படங்களால் சீரழியும் இளைஞர் சமூகம் : பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை

Kogilavani   / 2011 ஏப்ரல் 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இணையத்தளம் மூலம் பாலியல் காட்சிகளை பார்வையிடுவதற்காக வாரத்தில் இரண்டு நாட்களை இளைஞர்கள் செலவிடுவதாக  பிபிசி வானொலியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

18 தொடக்கம் 24 வயதுடைய இளைஞர்களில் நான்கில் ஒரு வீதத்தினர் அதிகளவில் பாலியல் காட்சிகள் உள்ள படங்களை பார்வையிடுவதாக இந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

அதேவேளை,  18 முதல் 24 வரை வயதுடைய இளம் பெண்கள் சராசரியாக வாராந்தம்  15 நிமிடங்கள் இவ்வாறான படங்களை பார்வையிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாராந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு குறைவான நேரத்தை இதற்காக செலவிட்ட மூன்றில் ஒரு பங்கினர் இதன் விளைவாக தாம் உரிய நேரத்தில் நிகழ்வுகள், சந்திப்புகளில் பங்குபற்றத் தவறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், 4 வீதமானவர்கள் ஒரு வாரத்தில் 10 மணித்தியாலங்களுக்கும்  மேலாக தொடர்ச்சியாக ஆபாசப் படங்களை பார்வையிடுகின்றனராம்.  இது ஒரு சிக்கலான குறைபாடான நிலை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

18 முதல் 24 வரை வயதுடைய 1,000 பேரிடம் இது தொடர்பான கணக்கெடுப்பை பிபிசி  வானொலி மேற்கொண்டது.

இதில் நான்கில் ஒரு வீதத்தினர் தாங்கள் பார்க்கும் படங்களின் வகை குறித்து  கரிசனை கொண்டிருப்பதாக  தெரிவித்துள்ளனர்.

மூன்றில் ஒரு வீதமானோர் இத்திரைப்படங்களை பார்ப்பதால் தமது துணையுடனான பாலியல் ஆர்வம் குறைந்து வருவதாக கூறியுள்ளனர். வாராந்தம் 10 மணித்தியாலங்களுக்கு அதிகமாக பாலியல் படங்களை பார்வையிடுவோர் மத்தியில் இப்படி கூறுவோரின் வீதம் பத்தில் ஏழாக அதிகரித்துள்ளது.

போர்ட்மன் மருத்துவ நிலையத்தின் வைத்தியர் ஹெதர் வூட் இது குறித்து தெரிவிக்கையில்இ அதிகமான மக்கள் பாரியளவிலான நேரங்களை இதற்காக செலவிடுகின்றனர். இவர்கள் அதிமானளவு மகிழ்வை அனுபவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

'அவர்கள் தங்களை  குறித்து கவலையடைகிறார்கள்,  தாம் பார்க்கும் விடயங்கள் குறித்து கவலையடைகிறார்கள்.

இந்நடவடிக்கை அவர்களின் உறவுகளுடன் அதிகளவிலான பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றது' எனத் தெரிவித்துள்ளார்.

ஹன்னா இவான்ஸ் எனும் 19 வயதான யுவதி இது தொடர்பாக கூறுகையில்  'இளம் ஆண்கள் தமது துணைவிகள் படுக்கையறையில் ஆபாசப்பட நட்சத்திரங்களைப் போன்று நடந்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்' என தெரிவித்துள்ளார்.

'எனது வயதையொத்த அநேகமான இளைஞர்கள் தொடர்ந்து இந்தத் படங்களை பார்வையிடுகின்றனர். அவர்கள் நிஜ வாழ்க்கையில் பெண்களுடன் பேசும்போதும் ஆபாசப்படங்களில் பேசுவதைப் போலவே பேசுகிறார்கள்.

இதைத்தான் அவர்கள் கற்றுக்கொண்டார்கள் எனில் படுக்கையறைக்கும் இதைத்தான் அவர்கள் கொண்டு செல்லப் போகிறார்கள். நல்ல காதலி எனில் ஆபாசப்படத்தில் வரும் பெண் போலவே நடந்துகொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இது நல்லதல்ல ' என ஹன்னா இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 23 April 2011 09:22 PM

    பிபிசி செய்தி பார்த்துக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே!

    Reply : 0       0

    Boosary Sallih Tuesday, 03 May 2011 12:42 AM

    ஒவ்வொரு பெற்றாரும் கட்டாய வாசிக்க வேண்டிய ஆக்கம் இது. வாழ்க உமது பணி!

    Reply : 0       0

    sameer Sunday, 26 June 2011 10:45 PM

    இந்த ஆபாச படங்களால் சீரழியும் பெண்கள் தான் இப்போது அதிகமாக காணப்படுகின்றனர் இதை ஒழிக்க ஒரு மகானும் முன்வரவில்லையே இது கவலைக்குரிய விடயமாகும் .............

    Reply : 0       0

    Hot water Sunday, 26 June 2011 10:49 PM

    இந்த ஆபாச படங்களால் சீரழியும் ஆண்களை எந்த மகான் பார்க்கிறார்?

    Reply : 0       0

    sameer Sunday, 26 June 2011 11:04 PM

    ஆண்களை விட இப்போது வீட்டில் இருக்கும் பெண்கள்தான் இதை அதிகமாக விரும்புகின்றார்கள் என்று சொல்ல வந்தேன். அனால் இதற்கான சந்தர்ப்பத்தை அமைத்து கொடுப்பது ஆண்களாக இருக்கலாம்...... இது பற்றி உங்கள் கருத்து ......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X