Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 31 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ இதழிலொன்றில், மும்பாயிலுள்ள கிராண்ட் மருத்துவ கல்லூரியின் வைத்தியர்கள் தாம் கண்டறிந்த புற்றுநோய் வகையொன்று குறித்து தெரிவித்துள்ளனர். அப்புற்றுநோயை 'சாறி புற்றுநோய்' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'நாங்கள் கடந்த இரண்டு வருடங்களில் 3 பெண்களுக்கு இடைப் புற்றுநோய் அல்லது சாறி புற்றுநோய்க்காக மருத்துவ சிகிச்சையளித்துள்ளோம்' என வைத்தியர் ஜி.டி பாக்ஷி தெரிவித்துள்ளார். இவர்களில் இரு பெண்கள் கடந்த இருவடங்களுக்கு முன்பாக மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
'அப்பெண்களில் 3 ஆவது பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இவ்வாறான நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள்.
இடுப்பில் ஒரே இடத்தில் சேலைக்கான பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டும்போது அது நாளாடைவில் எரிச்சிலை ஏற்படுத்தக் கூடும். இது நிலையான எரிச்சல் அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகமான சேலை கட்டும் பெண்கள் நீண்டகால நோயாக மாறும்வரை அதை அவதானிப்பதில்லை' என்று வைத்தியர் பாக்ஷி தெரிவித்துள்ளார்.
டாக்டர் அசோக் டி பொரைஸா மற்றும் டாக்டர் முகுந்த் பீ. டயேட் ஆகியோருடன் இணைந்து அவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
பெண்கள் இவ்விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இடை தழும்புகள் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதுவே இந்த 3 பெண்களுக்கும் சிகிச்சையை பெறுவதற்கு காரணமாக அமைந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
சேலை கட்டும் பெண்கள் இடைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாத வண்ணம் உள்பாவாடையின் நாடாவை இறுக்கமில்லாமல் கட்டவேண்டும். அல்லது அதற்கு வழக்கமான கயிறுபோன்ற நாடாவுக்கு பதிலாக அகலமான பட்டியின் மூலம் அழுத்தத்தை குறைக்கலாம் என டாக்டர் பாக்ஷி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வகையான புற்றுநோய்களானது காற்சட்டைகள் மற்றும் இடைப்பட்டிகளினால் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் மூலமான அழுத்தம் ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகக் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
'இந்நோயிக்கான சிகிச்சையானது அதனை கண்டறியும் பருவத்தில் தங்கியுள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் அதனை சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் இது நிணநீர் பகுதி முழுதும் பரந்துவிட்டால் எமக்கு அதனை வேகமாக பரவுவதற்கு முன் அகற்ற வேண்டிய தேவையேற்படும்' என அவர் கூறினார்.
சென்னையை தளமாகக் கொண்டு இயங்குபவரான தோல் நோய் மருத்துவர் வைத்தியர் மாயா வேதமூர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சேலை அணியும் பெண்களில் 3 வீதமானோர் தோல் எரிச்சலுக்காக சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர். ஆனால் இந்த எரிச்சல் நோயாக மாறியதை நான் கண்டறிந்ததில்லை. அப்பெண்களுக்கு பாவாடை நாடாவை மென்மையாக கட்டவேண்டும். அல்லது ஒரு அகலமான பட்டியை அணிய வேண்டும் என நான் அறிவுறுத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
easternbrother Wednesday, 01 February 2012 03:10 AM
அடி வயித்தையும் இடுப்பையும் ஆபாசமாக காட்டி சேலை அணியும் பொம்பளைகளுக்கு இந்த நோய் வரட்டும்...... நமது தாய்மார்கள் அணிகிறார்கள் எவ்வளவு ஒழுக்கம்......இவர்களுக்கு இப்படி நோய் வந்து சரித்திரமே இல்லையே.
Reply : 0 0
Jeni Wednesday, 01 February 2012 05:20 AM
@easternbrother, இது இடுப்பு தெரியும்படி சேலை கட்டுவதால் வரும் நோயல்ல. இறுக்கிக் கட்டுவதால் வரும் நோய்.
Reply : 0 0
pranavan Wednesday, 01 February 2012 04:37 PM
பெண்கள் எப்படி ஆடை அணிகின்றார்கள் என்று பார்ப்பதையே சிலர் தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று நான் நினைக்கிறேன். பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டுவதால்தான் இவ்வாறான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. பெண்களே சேலை அணியும் போது இனிமேல் அவதானமாக இருங்கள்.
Reply : 0 0
easternbrother Friday, 03 February 2012 03:25 AM
பலருக்கு பொம்பளையல் நல்லா உடம்பை காட்டினாத்தான் நித்திரையே வரும்........அப்படி ஒரு கழிசடைக் கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை........
Reply : 0 0
manmathan Monday, 06 February 2012 03:11 PM
இதுபாவாடை புற்று நோய். அதுக்கு எதற்கு சாரிய கோபிப்பான்?
Reply : 0 0
sathiskumar Tuesday, 07 February 2012 05:08 AM
கண்டு பிடிச்சா ?
அப்போ ரவுசர் போடும்போது இருக்காமல் அணிய முடிமா ? அதுக்கப்புறம் என்ன ரவுசர் புற்று நோயா?
Reply : 0 0
Neththiyadi.. Sunday, 12 February 2012 01:43 PM
சேலை கட்டும் பெண்ணுகொரு புற்று நோய் உண்டு, ....... கண்டுகொண்டேன் கண்களுக்குள் கண்ணீர் கொண்டேன் ...............
Reply : 0 0
siraj Tuesday, 14 February 2012 05:05 AM
ஹபாய் போடுவது ஏன் என்று இப்ப புரிகிறதா
Reply : 0 0
atham Sunday, 19 February 2012 09:14 PM
இஸ்லாமிய கலாச்சாரப்படி பெண்கள் உடை அணிந்தால் இந்த நோய் வராது. ஹபாயா போடுவது நல்லது.
Reply : 0 0
ni Sunday, 01 April 2012 05:51 PM
ஹபாயா போடுவதால் உடலும் மறைகிறது பாவங்களும் குறைகிறது.
Reply : 0 0
vadivalagan Sunday, 20 January 2013 09:52 AM
விலையட்ட எடுத்துக்க வேண்டாம். இது உண்மை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago