2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வியர்வை மணம் தம்பதிகளை ஈர்க்கிறது: விஞ்ஞானிகள் தெரிவிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வியர்வை மணம் என்பது பொதுவாக விரும்பப்படாத ஒன்றாக கருதப்படுகிறது. ஆடைகளில் வியர்வை அடையாளங்கள் படியும்போது அது அசௌகரியத்தை ஏற்படுத்துவதுமுண்டு.

எனினும் வியர்வை அவ்வளவு மோசமானது அல்ல என விஞ்ஞானிகள் சிலர் கூறுகின்றனர். குறிப்பாக புதிய காதலி, காதலியை தேடிக்கொள்வதற்கும் தற்போதுள்ள துணையுடனான உறவை பேணவும் வியர்வை உதவுவதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியர்வை கணவன் மனைவிக்கு இடையிலான ஈர்ப்பை ஏற்படுத்த உதவுகிறது என  காமம் மற்றும் காதல் என்ற புத்தகத்தின் இணை ஆசிரியையான கெப்ரியெலா புரோபோஸ் தெரிவித்துள்ளார்.

வியர்வையில் ஈர்ப்பை ஏற்படுத்தும் பெரோமன் எனும் இரசாயனம் உள்ளது. இது ஆண்களிலும் பெண்களிலும் தொழிற்படுகிறது என அவர் கூறுகிறார்.

'சில பெண்கள் அவர்களது காதலரின் ரீ சேர்ட்களை அணிய விரும்புவர். அதேபோல் இளைஞர்கள் தமது காதலிகளின் ரீ ஷேர்ட்டை அணிய விரும்பலாம்.

எனது இளம் பருவத்தில் நானும் எனது காதலரும் ரீ ஷேர்ட்டுகளை பரிமாறிக்கொள்வோம். என்ன செய்கிறோம் எனப் புரியாமலேயே இப்படி செய்தோம். ஆனால்  அண்மையில் எனது 19 வயதான மகனும்  தனது காதலியுடன் ரீ ஷேர்ட்டுகளை பரிமாறியதை கண்டறிந்தேன்.

இது ஏனெனில், உங்களது துணைவரின் வியர்வை மனம் ஆடைகளில் கொஞ்சமாவது இருக்கும். அதனால்தான்  அந்த ஆடையை நீங்கள் விரும்புகிறீர்கள்' என கப்ரியெலா தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகத்தில், தனது துணையின் வியர்வை மனத்தை விரும்பிய ஒருவராக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தயவு செய்து கழுவி விடவேண்டாம். 3 நாட்களில் வருவேன் என அவர் தனது மனைவி ஜோஸப்பினுக்கு அனுப்பிய இரகசிய தகவலொன்றில் தெரிவித்துள்ளார்.

ஆடைகளை கழுவ வேண்டமென தனது மனைவிக்கு நெப்போலியன் கூறியிருக்க மாட்டார். இதனூடாக அவர் வேறு ஒன்றை கூற முனைகின்றார் என வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்வதாகவும் கெப்ரியெலா கூறியுள்ளார்.

'இந்த புத்தகத்தில் வியர்வை குறித்து பல குறிப்புகள் உள்ளன. வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தினாலும் வியர்வை மனம் இருக்கும்.

வியர்வை என்பது ஒரு மட்டம்வரை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. அளவுக்கு அதிகமானால் நல்லதல்ல. எப்போது அதனை நிறுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.' என அவர் கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X