2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

உயர் குதிக்காலணி அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை

Gavitha   / 2014 நவம்பர் 19 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நவீன உலகில், ஆடம்பரமாக வாழ நினைக்கும் பெண்கள், அவர்களது உடல்நலத்தை கருத்திற்கொண்டு, உயர்குதிகாலணிகளை அணிவதை எப்போது நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை.

உயர்குதிகாலணிகளை அணியவேண்டுமென்பது பெண்களின் சிறுபிள்ளைத்தனமானதொரு எண்ணமாக இருந்தாலும், அது அவர்களது உடலுக்கு பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துவது மாத்திரமல்லாது, ஆயுட்காலத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவிலுள்ள நொட்டிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனைகளின் பேராசிரியரும் எலும்பு சுகாதாரம் தொடர்பான கவனிப்புக்குழுவின் தலைவருமான தாஹிர் மசூதின் குழுவினாரால் அமைக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1975ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதிகளில் தவறி விழுதலே விபத்துகளுக்கு முழு காரணமாக அமைகின்றது என்று அவர்களின் முதலாம் கட்ட ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. பொதுவாக ஒரு ஆண்டுக்கு மரணிக்கும் மூன்று பேரில் ஒருவர் தவறி விழுந்தே மரணிக்கின்றார். அவர்களின் வயது கிட்டத்தட்ட 65 என மதிப்பிடப்பட்டுள்ளது.

உயர்குதிகாலணி அணிவது தவறி விழுவதின் முதல் காரணமாக அமைகின்றது. என்னதான் இந்த காலணிக்கு பெண்கள் பழக்கப்பட்டவர்களாக இருந்தாலும் ஏதேனுமொரு தடுமாற்றம்; காரணமாக நிச்சயம் தவறி விழுவது வழமையாவே உள்ளது.

உயர்குதிகாலணி அணியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் எலும்பு தொடர்பான நோய் ஏற்படும் அபாயம் காத்திருக்கின்றது என தாஹிர் மசூதின்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடுப்பெலும்பு முறிவு காரணமாக தவறி விழுவதால் உலகில் ஒரு வருடத்துக்கு சுமார் 700,000 பெண்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றர்.

இதனுள் நான்கு கிழமைகளில் 10 பேரும் ஒரு சிலர் ஒரு வருடத்துக்குள் இறப்பதாகவும் ஆய்வின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் காப்பாற்றப்பட்டவர்கள் எப்போதும் போல தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்த உயர்குதிகாலணிகளை பயன்படுத்துவதால் நாளொன்றுக்கு ஒருவர் 3-4 சதவீதமான தசை வலிமையை இழக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X