Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உப்பு நுகர்வை குறைத்தால் தலையிடியை மூன்றில் ஒருபங்கு குறைக்க முடியும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உப்பு நுகர்வை நாளொன்றுக்கு 3 கிராமாக குறைத்தால், தலையிடி பெருமளவு குறையும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
3 கிராம் உப்பு அரைதேக்கரண்டி அளவாகும். உப்பு நுகர்வை குறைக்கும்போது இரத்த அழுத்தம், இதய துடிப்பு அழுத்தம் குறைவதால் தலையிடி குறைகின்றது எனஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உப்பு நுகர்வை நாளொன்றுக்கு 9 கிராமிலிருந்து 3 கிராமாக குறைத்தபோது, தலைவலி 31 சதவீதம் குறையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோன் கொப்லின் பல்கலைக்கழகத்தின் லோறன்ஸ் அப்பீல் என்பவர் 'குறைந்தசோடியம் எடுத்தல் தலை வலியை குறைக்கும். ஆனால் உணவு முறைகளை மாற்றுவதால் தiயிடி குறையாது' என்று கூறியுள்ளார்.
இரத்த அழுத்தம் சாதாரண அளவில் இருந்தாலும் இரத்த அழுத்தத்தை குறைப்பதால், தலையிடிவருவதை குறைக்கலாம்.
உப்பை குறைக்கும்போது, இரத்தஅழுத்தம் குறைகின்றது. இதனால் பாரிசவாதம், மாரடைப்புவரும் ஆபத்துக்களும் குறைகின்றன. குறையும்.
'மருத்துப்பெட்டியை திறக்க முன்னர் நாம் ஏன் சுகவீனமுற்றோம் என யோசிக்க வேண்டும். அநேமாக இது வாழ்கை முறைமாற்றம், உணவுபழக்கத்தால் வந்ததாக இருக்கும்'என கதரின் ஜென்னர் எனும் மருத்துவர் கூறியுள்ளார். (தகவல்: டெய்லிமெயில்)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago