2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அநியாய கருமங்களைச் செய்தால் அது, நெருப்பாக வாட்டும்

Princiya Dixci   / 2017 ஜனவரி 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கள் வீட்டுக் குப்பை கூழங்களைக் கட்டி மூட்டையாக்கி, அடுத்தவர் வீட்டுக்கு முன், தெருவில் போடும் கலாசாரம், தற்போது எமது பகுதி மக்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது. நடு இரவில் வாகனங்களில் வந்து, குப்பைகளை வீசும் கனவான்களும் இதில் அடங்குவர். 

எந்தவித மனச்சாட்சியும் இன்றி, ஏராளமான குப்பைகள் எதிர் வீடுகளுக்கு முன்னால், நடுச்சந்திகளில் கொட்டினால் எமது சுற்றுப்புறச் சுகாதாரம்தான் என்னாவது? மிகவும் முக்கியமாகக் கவனிக்கத்தக்க விடயம் ஒன்று! 

தங்கள் வீடுகளுக்கு எதிரே குப்பைபோடுபவர்களைக் கண்டறிய கமெராக்களை (சி.சி.டி.வி) ஒருவர் பொருத்தியமையால், அடுத்த சில நாட்களில் குப்பை ​போடும் பிரகிருதிகள், அவற்றை அடுத்த சந்தியில் கொட்டலாயினர். சுகாதாரத் துறையினர் மனம் வைத்தால், இத்தகைய சமூக விரோதிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்கமுடியும். தங்களுக்கு நன்மை விளைவிக்குமென அநியாய கருமங்களைச் செய்தால் அது, நெருப்பாகச் மூழ்ந்து வாட்டும். 

 

வாழ்வியல் தரிசனம் 18/01/2017

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X