Princiya Dixci / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இழப்புக்கள் வரும்போது அது விதி என்று சொல்லிச் சமாதானத்தை தமக்குத் தாமே சொல்வதை ஆற்றாமை என்றுதான் சொல்ல வேண்டும்.
வரவுகளை நாம் சந்தோசத்துடன் ஏற்கின்றோம். இந்த வரவுகள் தங்களது முயற்சியால் ஏற்பட்டது எனத் திருப்திப்படுவார்கள்; அதே வேகத்துடனான வேகத்தை இழப்புக்கள் நேரிடும்போது விட்டுவிடக்கூடாது.
துன்பம் வரும் கால் முடங்குதல் கோழைத்தனத்துடன் இயங்காத ஒரு ஸ்தம்பித நிலை உருவாக இடம்கொடுக்கக் கூடாது. இந்த நிலை மிகவும் ஆபத்தானது.
ஊக்கத்துடன் செயலாற்றுபவர்கள் காலநிலை சரியில்லை என எண்ணினால் எதிர்காலம் என்னாவது?
காலம் கடிதென ஓடும்; கழியும் காலத்தில் ஒருவினாடிப் பொழுதும் ஒருவனைக் கோடீஸ்வரனாக்கும்.
வாழ்வியல் தரிசனம் 24/10/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .