2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தெளிதல் நன்றே!

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழின் உச்சியில் இருக்கும் போதே, எதிர்காலத்தில் அந்நிலையில் மாற்றம் ஏற்படலாம் என்கின்ற யதார்த்தத்தை ஏற்கும் மனோ பலத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் எதிர்காலத்தில் வரும் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது அல்லது தாங்கிக்கொள்வதற்கு இயலுமாகும்.  

ஆயினும், சிலர் தாங்கள் உயிர் வாழும் வரையும் மங்காப் புகழுடன் இருப்பதுண்டு. பல சமயங்களில் இந்த உலகம் நல்லோர்களை மறந்து விடுவதும் புதிதான விடயமும் அல்ல!
 
எங்கள் கடமைகளையே செய்கின்றோம்; வரும் பலாபலன்களும் நன்மை தீமைகளும் இறைவனைப் பொறுத்தது எனப் பொறுமையுடன் செல்வோரும் உள்ளனர்.   

ஓய்வுடன் நிம்மதியாக, வயது முதிர்ந்த காலத்தில் வாழும்போது எதனையும் மனதில் இருத்திக் குமைதல் தேவையற்றது; அர்த்தமற்றது. எல்லாக் குணநலனும் இணைந்த புவனியில் வாழும் கலையை உணருதல், தெளிதல் நன்றே!  

வாழ்வியல் தரிசனம் 21/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .