2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

மக்களுக்கு எதிரான அராஜகப் போர்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகர்கள் மக்களை மயக்கிப் பொய்யான விளம்பர யுக்தியைக் கையாளுவது நீதிக்கு எதிரான அறைகூவலாகும். போலியான வர்த்தக நடவடிக்கைகளைக் கூசாமல் செய்பவர்கள் இறுதியில் பெரும் நஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.  

வர்த்தகப் போட்டி, அதீத இலாபமீட்டும் பேராசைகளே விளம்பரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான முக்கியமான காரணமாகும்.  

மிகவும் நேர்மையுள்ள நிறுவனங்கள் இன்று வரை நிலைத்தே இருக்கின்றன.அடுத்த நிறுவனத்தை முடக்கும் எண்ணத்தை விடுத்து, தரமான, நேர்மையான வழங்கல்களை மக்களுக்குக் கொடுத்தலே பெரும் இலாபமீட்டுதலுக்கான ஒரே வழியாகும். தேசிய உற்பத்தியும் உறுதியாகும்.

நேர்மையற்ற வாணிபம் மக்களுக்கு எதிரான அராஜகப் போர்தான். 

வாழ்வியல் தரிசனம் 25/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X