Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏழ்மைப் பட்டால், ஒருவரிடம் சென்று கை நீட்டவேண்டும் என்பது, கூச்சப்பட வேண்டிய விடயம்தான். எதையும் இலவசமாகக் கோருதல், தனிமனித கௌரவக் குறைச்சலுமாகும்.
சிலர் திட்மிட்டு, காசு பணம் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களிடம் இரந்து வாழ்வார்கள். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு, வேறொருவரை அண்டி, தண்டல் பிழைப்பு நடத்துவார்கள்.
கேட்டு வாங்கிப் பழகினால், அந்தக் குணம், தொட்டுத் தொடர்ந்து வரும். வாழ்க்கைச் சக்கரம் சுழன்று வரும்போது, ஏழ்மையும் எட்டிப்பார்க்கும்.
அந்த நிலை நிரந்தரம் என எண்ணி, அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது, முட்டாள்த் தனம் அல்லவா?
இரந்து வாழ்ந்த ஒருவன், நல்ல நிலைக்கு வந்தால்கூட, “நீ என்ன இப்போது பெரிய மனுசனா” எனச் சிலர் சொல்லும் நிலை வரக்கூடாது.
வசதிகள் இல்லாது விட்டாலும், அதை ஒரு சந்தர்ப்பமாக்கித் தன்னைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்.
ரோசத்துடன் வாழ்தலே ஆரோக்கியமானது.
வாழ்வியல் தரிசனம் 26/02/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025