2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வரும் எதிர் விளைவு பற்றி, இயம்ப முடியாது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவளைகளும் பாம்பு இனங்களும் அழிந்து வருவதனால், எலிகளின் தொகை பெருகிவிட்டது. நுளம்பை உண்ணும் சிற்றினப் பூச்சிகள், கிருமிநாசினிப் பாவனை காரணமாக அழிந்து போனமையால், நுளம்பின் பெருக்கம் எல்லை மீறிவிட்டது.

இயற்கையை, அதன் வழி செல்ல அனுமதியளிக்காமல், தங்கள் வழியில் மனிதன் அதனை அழித்தால் வரும் எதிர் விளைவு பற்றி, இயம்ப முடியாது.

யானை, எருமைகள், மரை போன்றவை அருகுவதனால், காடுகளின் பெருக்கம் இல்லாதுவிட்டன. இந்த மிருகங்களின் சாணத்தால், அதனில் இருக்கும் தாவர விதைகள் எங்கும் பரவி, காடுகள் கனத்தமாகி விடுகின்றன.

பின் விளைவை உணராத மனித இனம், தனது நிலைமையை இனியாவது உணருமா?

 

வாழ்வியல் தரிசனம் 07/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .