2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இளவரசர் ஹரி என நினைத்து வில்லியமை வாழ்த்திய ஜாக்கி சான்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


இளவரசர் வில்லியமை, இளவரசர் ஹரி என நினைத்து தவறுதலாக பிரபல நடிகர் ஜாக்கிசான் வாழ்த்துக் கூறிய வேடிக்கையான சம்பவமொன்று லண்டனில் நடைபெற்றுள்ளது.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, பிரபலமானவர்களும் சில நேரங்களில் கவனக் குறைவான காரியங்களால் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகத்தான் செய்கிறார்கள்.

அந்தவகையில் பிரபல நடிகர் ஜாக்கிசான் நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை காட்சி ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில். இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் தனது மகன் வில்லியம் மற்றும் ஹரியுடன் கலந்துகொண்டார்.

அந்த மாநாட்டிற்கு இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் மற்றும் நடிகர் ஜாக்கிசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தென் துருவ பகுதியில் காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஹரிக்கு வாழ்த்து சொல்ல விரும்பிய ஜாக்கி, தவறுதலாக வில்லியமை ஹரி என நினைத்து கட்டியணைத்து வாழ்த்தி விட்டாராம். பின்னர் தான் குழப்பம் விலகியதாம்.

இது குறித்து ஜாக்கி கூறும்போது, 'வில்லியம், நான் ஹரி அல்ல அது எனது சகோதரர் என கூறினார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன். இருவரும் ஒரே மாதிரியாக உள்ளனர்' என தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .