2025 நவம்பர் 05, புதன்கிழமை

நகைச்சுவை நடிகர் பாலாஜி மரணம்

A.P.Mathan   / 2014 மார்ச் 07 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பாலாஜி, இன்று (07) தனது 43ஆவது வயதில் மஞ்சள் காமாலை நோயினால் பீடிக்கப்பட்டு காலமானார்.

திண்டுக்கல் சாரதி, சிலம்பாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பதுடன், தொலைக்காட்சி நகைச்சுவை தொடர்களிலும் நடித்திருப்பவர் பாலாஜி (43). சமீபத்தில் சிவா நடித்து பத்ரி இயக்கத்தில் வெளியான தில்லுமுல்லு என்ற படத்துக்கு வசனம் எழுதியவர். கடந்த சில வாரங்களாகவே பாலாஜி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றியதை தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.

திருநீர்மலை பிரதான வீதியிலுள்ள வீட்டில் பாலாஜி உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு வனஜா என்ற மனைவி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X