2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

இந்தியா மூத்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங் காலமானார்

A.P.Mathan   / 2014 மார்ச் 20 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும எழுத்தாளருமான, குஷ்வந்த் சிங் தனது 99ஆவது வயதில் இன்று (20) புதுடெல்லியில் காலமானார்.

தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹடாலி என்ற இடத்தில் பிறந்தவரான குஷ்வந்த் சிங், "தெ இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஒப் இந்தியா" சஞ்சிகையின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் அவர் "நேஷனல் ஹெரால்ட்" மற்றும் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.

எழுத்தாளருமான அவர், இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து எழுதிய "ட்ரெயின் டு பாகிஸ்தான்" என்ற புதினம் மிகப் பிரபலமானது.

பின்னர் அவர் வேறு பல புதினங்களையும், "சீக்கியர்களின் வரலாறு" என்ற புத்தகத்தையும் எழுதினார்.

1980இலிருந்து 1986 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் குஷ்வந்த் சிங்.

இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவில் விருதான பத்ம விபூஷண் விருது இவருக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இவருடைய மற்ற படைப்புகளில் "ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்" (நைட்டிங்கேல் பறவையின் பாடலை நான் கேட்கமாட்டேன்), ‘ட்ராஜெடி ஆப் பஞ்சாப் ‘(பஞ்சாபின் அவலம்) போன்றவை மக்கள் மத்தியில் மிக பிரபலமானவை.

தனது 98 வயதில் அவர் வெளியிட்ட ‘குஷ்வந்த்நாமா’ என்ற நூல்தான் அவருடைய கடைசி நூலாகும். (பிபிசி)


  Comments - 0

  • Pathmadeva Friday, 21 March 2014 01:32 PM

    அனுதாபங்கள்! ஒரு காலத்தில் “குஷி வந்த சிங்கம்” என்று இந்தியத் தமிழ்ப் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டவர்!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .