2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பாலைவனத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஓநாய் மனிதன் டேவிட் லெஜினோ

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹரிபொட்டர் திரைப்படத்தில் ஓநாய் மனிதனாக நடித்த டேவிட் லெஜினோ, மர்மமான முறையில் உயிரிழந்;துள்ளார். பாலைவனம் ஒன்றில் உயிரிழந்துள்ள  நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டமையானது அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

ஹொலிவூட்டில் பெரும் வசூலைக் கொடுத்த திரைப்படம் ஹரிபொட்டர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இத்திரைப்படத்தின் இரசிகர்களாக உள்ளனர். இத்திரைப்படத்தின் 3 பாகங்களில் ஓநாய் மனிதனாக நடித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் லெஜினோ.

50 வயதான டேவிட் லெஜினோ, கலிபோர்னியா மாகாணத்தின் டெத் வேலி பகுதியில் உள்ள பாலைவனத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்ததும் ஹெலிகொப்டரில் சென்று அவரது உடலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

புக்லைவனத்தில் நீண்ட தூரப்பயணம் செய்த அவர், கடுமையான வெப்பம் தாங்காமல் அங்கு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டேவிட் லெஜினோ நடிகராவதற்கு முன்பு, குத்துச்சண்டை வீரர் ஆக இருந்துள்ளார். தற்போது, இவர் நடித்துள்ள ஸ்வர்ட் ஒப் வெஞ்சன்ஸ் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

டேவிட்டின் இந்த திடீர் மரணம் ஹொலிவூட்டில் அதிர்ச்சி அலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே டேவிட்டின் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X