2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

'காதல்' தண்டபாணி காலமானார்

A.P.Mathan   / 2014 ஜூலை 20 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

'காதல்' படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான தண்டபாணி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
 
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலர் நடித்த 'காதல்' படத்தில் நடித்தவர் தண்டபாணி. அப்படத்தில் அவரது வில்லன் நடிப்பு மற்றும் குரல்வளம் ஆகியவை பிரபலமானதால் 'காதல்' தண்டபாணி என்று அழைக்கப்பட்டார்.
 
'காதல்' படத்தைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. 'இங்கிலீஷ்காரன்', 'சித்திரம் பேசுதடி', 'உனக்கும் எனக்கும்', 'வட்டாரம்', 'முனி', 'மருதமலை', 'மலைக்கோட்டை', 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
 
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜிற்கு நண்பராக நடித்திருந்தார்.
 
இன்று காலை மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு மரணத்திற்கு திரையுலகினர் பலரும் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .