2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

இளவரசர் ஜோர்ஜுக்கு வைர நகம்வெட்டி

Kogilavani   / 2014 ஜூலை 23 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோரின் முதல் குழந்தையான இளவரசர் ஜோர்ஜின் முதலாவது பிறந்த தினம் நேற்று செவ்வாய்கிழமை (22) பிரிட்டனில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி அந்நாட்டின் மிகவும் பிரபல நிறுவனமான ஸ்டைல்ஃபைல் நிறுவனம் ஒரு மில்லியன் பவுண் பெருமதியான வைரக்கல் பதித்த நகம்வெட்டி ஒன்றை தயாரித்துள்ளது.

இந்நகம்வெட்டியானது 18 கரட் தங்கத்தாலும் 350 வைரக்கற்களையும் கொண்டு உலகிலேயே மிகவும் விலைமதிக்கத்தக்க நகம்வெட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பதிக்கப்பட்டுள்ள ஒரு வைரத்தின் மதிப்பு 2,000 பவுண்ட் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குழந்தைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நகம்வெட்டியை தயாரிப்பதற்கு 10 வாரங்களை செலவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

'குழந்தைகளின் நகங்களை வெட்டும் போது தந்திரமாக செயற்பட வேண்டும். குழந்தைகள் நகங்களை வெட்டவிடவில்லை என்று அப்படியே விட்டுவிட முடியாது. இதனால்தான் அவ்வாறானதொரு அழகிய வடிவமைப்பை கொண்ட நகம்வெட்டியை தயாரித்தோம். இது இளவரசர் ஜோர்ஜுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்' என  அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .