2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தென்கொரியாவில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு

Kogilavani   / 2014 ஜூலை 25 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்கொரியாவில் முதன்முறையாக மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் பூசான் நகரத்தில் இந்தச் சிலை திங்கட்கிழமை (21) புதிய மேயர் பியோங் சூ சா சிலையை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய பியோங் சூ,

'இந்தியாவுக்கும் கொரியாவுக்குமிடையே நீண்ட, நிலையான, ஆழமான உறவு இருந்து வருகிறது. மகாத்மா காந்தியின் அமைதி, சகோதரத்துவம் போன்ற பண்புகளை ஒவ்வொரு கொரிய குடிமகனும் பின்பற்ற வேண்டும்' என குறிப்பிடடார்.

இந்நிகழ்வில் தென்கொரியாவுக்கான இந்தியத் தூதர் விஷ;ணு பிரகாஷ;, இந்திய கலாச்சார உறவுக் கழகத்தின் இயக்குநர் சதீஷ;; மேத்தா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்திய கலாச்சார உறவுக் கழகத்தின் அன்பளிப்பான இந்த வெண்கலச் சிலை, கௌதம் பால் எனும் பிரபல சிற்பியால் வடிவமைக்கப்பட்டது.
இவ்வாண்டின் ஆரம்பத்தில்,  இரு நாடுகளின் நட்புறவின் அடையாளமாக தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹைக்கு இந்திய அரசு போதி மரக் கன்றை வழங்கிச் சிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .