2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சாரல் நாடனின் இறுதி கிரியைகள் நாளை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த ஈழத்து எழுத்தாளர் சாரல் நாடனின் இறுதி கிரியைகள் நாளை சனிக்கிழமை(2) கொட்டகலை பொதுமயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக இலக்கியவாதி என தனக்கேயான அடையாளத்தை கொண்ட ஈழத்து இலக்கியவாதி சாரல் நாடன் நேற்று வியாழக்கிழமை (31) காலமானார்.

உடல்நலக் குறைவால் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலைக் கொழுந்து, சி.வி. சில சிந்தனைகள், தேசபக்தன் கோ. நடேசையர், பத்திரிகையாளர் நடேசைய்யர், மலையகம் வளர்த்த தமிழ், இன்னொரு நூற்றாண்டுக்காய், மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .