2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் தனது 90 ஆவது வயதில் சென்னையில் நேற்று (08) காலமானார்.

இறை அருள் பாடகர் என்றும் இசை முரசு என்றும் அவரது ரசிகர்களால் புகழப்பட்ட நாகூர் ஹனிபா, இஸ்லாமிய பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்களையும் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர்.

சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த நாகூர் ஹனிபாவின் பூதவுடலுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு ஹனிபாவின் உடல் அவரது சொந்த ஊரான நாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X