2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இளவரசி ஆனிக்கு காயம்

Editorial   / 2024 ஜூன் 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இருந்து வருகிறார். இவருடைய சகோதரி, இளவரசி ஆனி (வயது 73). இந்நிலையில், கேட்கோம்ப் பார்க் எஸ்டேட்டில் இருந்தபோது, நடந்த சம்பவமொன்றில் இளவரசி ஆனிக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். முழு அளவில் அவர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லசுக்கு, இளவரசி ஆனிக்கு காயம் ஏற்பட்டது பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளவரசி விரைவில் குணமடைந்து திரும்புவதற்கான தன்னுடைய அன்பையும், விருப்பங்களையும் ஒட்டுமொத்த அரச குடும்பத்துடன் சேர்ந்து அனுப்பியிருக்கிறார் என தெரிவிக்கின்றது. வேறு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .