2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நீச்சல் உடை போட்டியில் பல இளம் பெண்களை வென்ற 46 வயது பெண்

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்ற 'பீச் பேப் 2012' நீச்சல் உடை போட்டியில் பல இளம் பெண்களை வென்று முதல் பரிசை 46 வயதான பெண்ணொருவர் தட்டிச் சென்றமை பலரை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான கரோல் டன்ஸ்டர் என்ற 46 வயது பெண்ணே இவ்வாறு முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

பிரிட்டனில் வருடா வருடம் நடைபெறும் இப்போட்டியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் பங்குபற்றுகின்றனர்.

இம்முறை, பிரிட்டனின் 'பைரேட்' வானொலி இந்த போட்டியை முன்னின்று நடத்தியுள்ளது.

20 முதல் 30 வயதான பெண்கள் அதிகமாக கலந்துகொண்ட இப்போட்டியில் அதிக வயதுடைய பெண்ணாக இவர் மட்டுமே கலந்துகொண்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இப்போட்டியில் பல இளம் பெண்கள் கலந்துகொண்டிருந்தாலும் சிறப்பு உடலைமைப்பை கொண்டிருந்தமைக்காக பார்வையாளர்கள் இவiர் சிறந்த நீச்சலுடை அழகியாக தெரிவு செய்துள்ளனர்.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் பெண்கள் முதலில் நீச்சலுடையில் எடுக்கபட்ட புகைப்படங்களை மேற்படி வானொலியின் பிரத்தியேக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். பின் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மீது கருத்துக் கணிப்பு நடைபெரும்.

இம் முறை நடைபெற்ற கருத்துகணிப்பில் அதிகமான இணையத்தள வாசிகள் கரோலையே தெரிவு செய்திருந்தனர்.

சாரதி பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும் இவர் தடகள வீராங்கனை என்பதுடன் இதுவரை 7 மரதன் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

முறையான நித்திரை மற்றும் மீன் எண்ணெய் மசாஜ் என்பவற்றால் தனது உடல் தோற்றத்தை சிறப்பாக பேணி வரும் இவர் முழுநேர மொடல் அழகியாக வரவேண்டும் என்பதை தற்போது கனவாக கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .