2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செயற்கை கருத்தரிப்பு மூலம் 14 வயது மகள் கட்டாய கர்ப்பம்: தாய்க்கு 5 வருட சிறை

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூத்த மகளின் கர்ப்பப்பைக்குள் கட்டாயமாக விந்தணுவை செலுத்தி, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை விவாகரத்து செய்து விட்டு இங்கிலாந்தில் குடியேறியுள்ளார். அங்கு 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துள்ளார். மேலும், ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்ட அவர் அக்குழந்தை தனது குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.

அதற்காக விபரீத முயற்சியில் இறங்கிய அவர், தேவையான விந்தணுவை டென்மார்க்கில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் இணையத்தளம் ஊடாக வரவழைத்துள்ளார். பின்னர் அதனை தனது தத்து குழந்தைகளில் மூத்தவளான 14 வயது மகளை இதற்காகத் தேர்ந்தெடுத்து அச்சிறுமியின் கர்ப்பப்பைக்குள் தானமாக பெறப்பட்ட விந்தணுவை கட்டாயப்படுத்தி செலுத்தியுள்ளார்.

இதன் மூலம் செயற்கை முறையில் அச்சிறுமியை கருத்தரிக்கச் செய்துள்ளார்.  இது குறித்து அச்சிறுமி கூறுகையில், 'என் அம்மா என்னை மேலும் அதிகமாக நேசிப்பார் என்பதால் இதற்கு நான் சம்மதித்தேன். தான் விரும்பியதை அடைய எதையும் செய்யும் மனப்போக்கு அவருக்கு உண்டு' என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சிறுமியை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய்க்கு எதிராக லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் ஜாக்சன், குற்றம் சாட்டப்பட்ட அந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

  Comments - 0

  • safras Thursday, 02 May 2013 06:07 AM

    நல்ல அம்மா...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .