2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சலவை இயந்திரத்தில் சிக்கிய 3 வயது சிறுவன்

Kogilavani   / 2014 ஜூலை 16 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


சலவை இயந்திரமொன்றில் சிக்கிக்கொண்ட மூன்று வயது சிறுவனை, தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்ட சம்பவம் சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சிறுவனும் அவனது பெற்றோரும் விருந்தினரின் வீடொன்றிற்கு சென்றுள்ளனர். இதன்போது,சிறுவன் சலவை இயந்திரம் இருக்கும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

நாயொன்று சலவை இயந்திரத்தில் இருந்து அனைவரையும் பயமுறுத்தும் காணொலியொன்றை ஏற்கெனவே பார்த்திருந்த அச்சிறுவன் தானும் அவ்வாறு செய்தால் எவ்வாறிருக்கும் என்று எண்ணியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறுவன், சலவை இயந்திரத்தினுள் புகுந்தபோது அவனது கால் பெருவிரல்கள்  உள்ளிருந்த குழாயொன்றில் மாட்டிக்கொண்டுள்ளது.

பெற்றோர்களினால் சிறுவனை வெளியில் எடுக்கமுடியாத நிலையிலேயே தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு பிரிவினர் சலவை இயந்திரத்தை வெட்டி, சிறுவனை எவ்வித பாதிப்புகளும் இன்றி மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .