2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அடக்கம் செய்யப்பட்ட பெண் 7ஆம் நாள் கிரியையின் போது வீடு திரும்பினார்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 15 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்தில் உயிரிழந்த பெண்ணொருவரை நல்லடக்கம் செய்து 7ஆம் நாள் கிரியை நடத்திக்கொண்டிருந்த போது அப்பெண் வீடு திரும்பியதால் உறவினர்கள் அதிர்ச்சிக்குள்ளான சம்பவமொன்று கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடவத்தை, ரன்முத்துகல பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற விபத்தொன்றில் தாயான வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வயோதிபப் பெண்ணை அடையாளம் காட்டிய அவரது மூன்று பிள்ளைகள், உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் சடலத்தை இறுதிக் கிரியைகளுக்காக வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கு நான்கு நாட்கள் வைத்திருந்து நல்லடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கான 7ஆம் நாள் கிரியைகள் இன்றைய தினம் (15) அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளன. இதன்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

தங்களது தாயின் வருகையை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிய பிள்ளைகள், சற்று நேரத்துக்குப் பின்னரே தங்களது தவறை உணர்ந்துள்ளனர்.

தனது தாயின் சடலம் என எண்ணி வேறொரு பெண்ணின் சடலத்தையே அவர்கள் எடுத்துவந்து இறுதிக் கிரியைகளை நடத்தியுள்ளனர் என்ற உண்மை சில நிமிடங்களின் பின்னரே தெரியவந்துள்ளது.

  Comments - 0

  • ibnuaboo Friday, 15 November 2013 02:16 PM

    நல்ல தமிழ் சினிமா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .