2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒரே தடவையில் 3 கன்றுகளை ஈன்ற பசு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கினிகத்தேனை, வட்டவளை, லொனெக் பாற்பண்ணையில் பசு ஒன்று ஒரே தடவையில் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பொதுவாக பசுக்கள் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈனும். எனினும் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வதான நிகழ்வாக கருதப்படுகின்றது.

வட்டளை பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட வட்டவளை லொனெக் பாற்பண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த பாற்பண்ணையில் 200க்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன.

இந்த பாற்பண்ணையின் நடவடிக்கைகள் நவீனமுறையில் இடம்பெறுவதோடு சுமார் 35 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்நிலையிலேயே இந்த பாற்பண்ணையிலுள்ள பசுவொன்று ஒரே தடவையில் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .