2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெண்ணை 15 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர்

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் தனது உறவுக்கார பெண்ணை 15 ஆண்டுகளாக வீட்டுக்கு பின்னால் இருக்கும் கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவு புரிந்து வந்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவூல் ஓசுவா(52) என்ற நபருக்கே சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர், தனது உறவுக்கார பெண்  12 வயது சிறுமியாக இருக்கும்போதில் இருந்து அவரை தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவு புரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது வீட்டுக்கு பின்னால் ஒரு கொட்டகையை கட்டி அப்பெண்ணை அங்கு வைத்து வல்லுறவு செய்ததுடன் அவரை கட்டாயப்படுத்தி அங்கேயே தங்க வைத்துள்ளார்.

மேற்படி நபரின் இத்தகைய செயல் அவரது குடும்பத்தாருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இது குறித்து பொலிஸில் புகார் செய்யவில்லை.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணுக்கு 27 வயதாகும்போது அப்பெண்ணை தப்பிச்செல்ல குடும்பத்தார் உதவி செய்துள்ளனர். 

அப்பெண்ணும் தப்பிச் சென்று பொலிஸாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார்; ரவூல் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X