Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்வாணமாகத் தோன்றினார் என்ற குற்றச்சாட்டில் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நபர் ஒருவர், சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி ஒரு நிமிடத்திற்குள் மீண்டும் நிர்வாணமாக தோன்றியதால் மறுபடியும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
ஸ்டீபன் கோவ் எனும் 52 வயதான இந்நபர் பொது இடத்தில் நிர்வாணமாகத் தோன்றிய குற்றச்சாட்டில் 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இத்தண்டனைக் காலம் முடிந்து அண்மையில் அவர் விடுதலையானபின் பேர்த் ஷெரீப் நீதிமன்றமொன்றில் மற்றொரு வழக்கில் ஆஜரானார். ஆனால் அங்கு அவர் நிர்வாணமாகத் தோன்றியதால் அவருக்கு மீண்டும் 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணமாக தோன்றியதன் மூலம் நீதிமன்றத்தில் நிலவும் அமைதிக்கும் பங்கம் விளைத்ததுடன் நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாக ஸ்டீபன் கோப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வருபவர்கள் மரியதையான ஆடைகளை அணிந்து வருவதையே எதிர்பார்ப்பதாக நீதிபதி தெரிவித்தார். முன்னாள் கடற்படை வீரரான ஸ்டீபன் கோவ் லொறி சாரதியாக பணியாற்றி ஓய்வு பெற்றபின் நிர்வாணமாக திரிவதை வழக்கமாக கொண்டுள்ளார். நிர்வாணமாகத் திரிவதை தடுப்பது மனித உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் மீறும் நடவடிக்கை என அவர் கூறுகிறார். நிர்வாணமாகத் திரிந்த குற்றச்சாட்டில் கடந்த தசாப்தத்தின் பெரும்பகுதியை இவர் ஸ்கொட்லாந்தில் சிறைகளில் கழித்தமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
1 hours ago
red Tuesday, 30 August 2011 07:44 PM
mada chaamuraani
Reply : 0 0
xlntgson Tuesday, 30 August 2011 09:26 PM
சிறை வாசம் சுகமோ தெரியாது!
சிலர் சிறையில் வாழ்ந்து பழக்கப்பட்டு மீண்டும் எதாவது தவறு செய்து சிறைக்குப் போக விரும்புவார்களாம்!
கசையடி ஒன்று தான் தீர்வு!
Reply : 0 0
bis Tuesday, 30 August 2011 09:50 PM
உழைக்காமல் சாப்பிட்டு பழகிப் போச்சாக்கும்!
Reply : 0 0
lankan Wednesday, 31 August 2011 06:24 AM
இது தான் வெஸ்டர்ன் நீதி. இவங்களுக்கு சும்மா சாப்பாடு போடறாங்க இல்ல இவங்களுக்கு கடுமையான தண்டன கொடுக்க வேண்டும். இல்லன இது இன்னுமும் நடக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago