2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பச்சிளம் பாலகியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு 25 வருட சிறைதண்டனை

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பச்சிளம் பாலகியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலைச்செய்த சம்பவம் தொடர்பில் கைதான பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு 25 வருட சிறைதண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

பெரி மாக்கேனி என்ற 33 வயது நபர் கடந்த வருடம் தனது பெறா மகளான மில்லி மார்டின் என்ற குழந்தையை இவ்வாறு துன்புறுத்தி கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நபர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இந்த வருடத்தின் முதல் பகுதியில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் பிரிட்டன்  நீதிமன்றமானது மேற்படி நபருக்கு 25 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி,  "இது மிகவும் வக்கிரமிக்க பாலியல் தாக்குதல்"  என  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'பெரிக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை மட்டும் போதுமானதல்ல. இனி மார்க்கேனி வெளிச்சமான நாட்களை பாரக்கவே கூடாது. எங்களால் இனி மில்லியை பார்க்க முடியாது'  என மில்லியின் தாய் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி
பச்சிளம் பாலகி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை


You May Also Like

  Comments - 0

  • asana Sunday, 27 January 2013 04:48 AM

    இப்படியானவர்கள் இருப்பதால்தான் அடிக்கடி உலகம் அதிர்கின்றது.

    Reply : 0       0

    hafees Monday, 28 January 2013 07:28 AM

    இப்படியானவர்களை கொலை செய்ய வேன்டும்.

    Reply : 0       0

    Syam Saturday, 09 March 2013 12:14 PM

    மரண தன்டணைகள் இவற்றிற்கு பெரிய தண்டணைகளாய் இருப்பினும் ஆயுள் தன்டணை வழங்கி தீர்பளித்தால் இதைப் போன்ற காமுகர்களும் பயந்து திருந்தி நடக்க வாய்ப்புள்ளது!

    Reply : 0       0

    hasni afrid Sunday, 17 November 2013 03:31 PM

    பண்றியை கொலை செய்ய வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X