2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மூகூர்த்தத்தில் முக்குளித்த '3அடி ஜோடி'

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


மூன்றே மூன்று அடி உயரமான ஜோடியொன்று திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளது. களுத்துறையை சேர்ந்த மணமகனும் மொரட்டுவையைச் சேர்ந்த மணமகளுமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

மூன்றே மூன்று அடி உயரமான இருவருக்கும் மொரட்டுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலேயே சகல சம்பிரதாயங்களுடன் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

களுத்துறை கல்பானவைச் சேர்ந்த  மூன்றடி உயரமான 35 வயதான மணமகன் தர்மசிறி பிரேமலால், கடிகாரம் மற்றும் கையடக்க தொலைப்பேசி பழுது பார்க்கின்ற தொழில்நுட்பவியலாளர் ஆவார்.

அவரது உயரத்திற்கு ஏற்றவகையில் மொரட்டுவை சொய்சாபுரவைச் சேர்ந்த 26 வயதான மணமகளான திலினி இரேஷா கிடைத்தார் அது மட்டுமன்றி இருவரின் ஜாதகமும் பொருத்தமாக அமைந்துள்ளது. இதனையடுத்தே இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .