2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காதல் தோல்வியை அடுத்து 5 பேர் சுட்டுக்கொலை

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் நபர் ஒருவர், தன்னுடன் தொழில்புரிந்த 5 பேரை சுட்டுக்கொன்ற சம்பவமொன்று ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யரான திமிட்ரி வினோகிரடவ் என்ற 30 வயது நபரே இச்செயலை புரிந்துள்ளார். இந்நபர் மொஸ்கோவில் உள்ள மருந்தகம் ஒன்றில் தொழில்புரிந்து வந்துள்ளதுடன் அந்நிலையத்தில் தன்னுடன் தொழில்புரிந்த 3 ஆண்கள் உட்பட சக நண்பர்களை சுட்டுக்கொலை செய்துள்ளார். இவ்வாறு கொலைசெய்தவர்களில் தான் காதலித்த பெண்ணும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நபர் மாறுவேடத்தில் அலுவலகத்துக்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த இரண்டு துப்பாகிகளை எடுத்து இக்கொலையை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் இக்கொலையை புரிவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக 'மனித இனத்தின் கேடுகளை வெறுக்கிறேன்' என இணையத்தளமொன்றில் குறிப்பு எழுதியுள்ளார். 

'நான் மனித சமூகத்தை வெறுக்கும் அதேவேளை, அதனது ஒரு பகுதியாக இருப்பதை விரும்பவில்லையென' அவர் ரஷ்யாவின் மிகப்பெரிய சமூக வலைத்தளமொன்றிற்கு குறிப்பை அனுப்பியுள்ளார்.

எனது மகனுடன்  தொழில்புரிந்து வந்த பெண் எனது மகனுடனான காதலை முறித்துக்கொண்டதலிருந்து அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மேற்படி நபரின் தாயான யெல்னா தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அந்நபரிடமிருந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .