2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உதட்டோடு உதட்டை பதித்து 50 கிலோமீற்றர் வேகத்தில் முத்தமழை

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் எதிரும் புதிருமாக அமர்ந்து உதட்டோடு உதட்டை பதித்து முத்தமழை பொழிந்தவாறே நட்டநடு வீதியில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காதல் ஜோடியொன்று பயணித்த சம்பவமொன்று பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

பிரேசிலின் தென் பிராந்திய நகரமான பரனாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யார் என அடையாளம் கண்டுகொள்ள முடியாத மேற்படி காதல் ஜோடியானது ஒரு நிமிடத்திற்கும் உதட்டோடு உதட்டை பதித்தவாறு மோட்டார் சைக்கிளிலில்  பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த காட்சியை பெர்னேண்டோ நெசிமென்டோ என்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதில் மோட்டார் வண்டியை செலுத்தும் ஆணை பெண்ணொருவர் தழுவிக் கொண்டு உதடோடு உதட்டை பதித்து முத்தமிடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பில் காட்சியை வீடியோவாக பதிவு செய்தவர் தெரிவிக்கையில்,

'நான் இதுவரை இவ்வாறான சம்பவங்களை பார்த்ததில்லை. இக்காட்சியை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் இது வழமைக்கு மாறானது என்பதுடன் மிகவும் அபயகரமானது. மேற்படி ஜோடிகள் பாதுகாப்பு கவசத்தையும் அணிந்திருக்கவில்லை.

நான் பயணிகள் இருக்கையில் இருந்துகொண்டு அக்காட்சியை ஒளிபதிவு செய்ய நினைத்தேன். ஏனெனில் மேற்படி இருவரும் பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கவில்லை. ஆனால், கூர்ந்து பார்த்தபோதுதான் அவர்கள் இருவரும் முத்தம்கொடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். ஆண் ஒரு கண்ணை மட்டுமே திறந்து கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தினார். இதுவும் அபாயகமானது' என்றார்.

'இச்சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மட்டும் கைது செய்யப்பட்டால் அவரது வாகன அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதுடன் 41,447 இலங்கை ரூபாவை அபராதமாக  விதிப்பேன்' என நெடுஞ்சாலை தலைமை பொலிஸ் அதிகாரி செல்டன் வோர்டொலின் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .