2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

குடிபோதையில் 8 வயது மகளை எரித்துக் கொன்ற தாய்

Kogilavani   / 2014 மார்ச் 04 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் பெண் ஒருவர் தனது 8 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் இந்தியாவின் ஆந்திரா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஒபுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேனா என்ற பெண்ணே தனது மகளான சிரிஷா என்ற சிறுமியை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

கணவரால் கைவிடப்பட்ட இப்பெண்ணுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் தனது மகள் தான் குடிப்பதை தடுப்பதாக சந்திரசோவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனாலும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரசேனா குடிபோதையில் இருந்ததால் அவர் தான் சிறுமி மீது தீ வைத்திருப்பார் என்று கிராமத்தினர் நினைத்தனர்.

ஆனால் சந்திரசேனாவோ தான் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி கிராமத்தை விட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .