2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காதலி விவகாரம்: முதியவர் ஒருவரை கத்தியுடன் துரத்திய 80 வயது நபருக்கு சிறை

Kogilavani   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலி விவகாரம் தொடர்பாக ஒருவரை கத்தியுடன் துரத்தியதற்காக 80 வயது முதியவர் ஒருவருக்கு ஒரு நாள் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் வேலை செய்யும் லிம் சாங் சாங் என்ற (80) வயது நபருக்கே இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது காதலி வீட்டு உரிமையாளரான சியோங் யீ முன்(65) என்பவருடன் உறவு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் காதலி விவகாரம் தொடர்பாக லிம் மற்றும் சியோங்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிம் 20 சென்றிமீற்றர் நீளமுள்ள கத்தியை எடுத்து சியோங் மீது வீசினார்.

சியோங் தூண் ஒன்றின் பின்னால் ஒளிந்திருந்தால் காயமின்றி தப்பிகொண்டார்.  அப்படியும் ஆத்திரம் தீராத லிம் குடை, பாக்கெட் கத்தி மற்றும் கத்தரிக்கோலை வீசினார். பதிலுக்கு சியோங் தீயணைப்பு சிலிண்டரை தூக்கி லிம் மீது வீசினார். இரண்டு முதியவர்கர்களும் வீசிய பொருட்கள் குறி தப்பியதால் அவர்கள் காயம் இன்றி தப்பித்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் தேவாலயத்திற்கு வந்து இரண்டு முதியவர்களையும் விலக்கிவிட்டனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லிம்முக்கு ரூ.1 இலட்சத்து 87 ஆயிரத்து 656 அபராதமும், ஒரு நாள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X