Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 நவம்பர் 10 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 மாத காலத்திற்குள் 11 மாணவர்களுடன் பாலியல் உறவை வைத்துக்கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கோவிங்டனைச் சேர்ந்த சிண்டி கிளிப்டன் (வயது 41) என்ற பெண்ணே 60 வருடங்களுக்கு மேலான சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த தசாப்தத்தில் இளம் வயது சிறுவர்களுடன் பாலியல் உறவை வைத்துக்கொண்ட குற்றச்சாட்டை ஏனைய எந்த ஆசிரியைகளையும் விட இவர் அதிகமாக எதிர்கொண்டிருக்கலாமென வழக்கு தொடுநர்கள் நம்புகின்றனர்.
அவர் மீது மொத்தமாக 53 குற்றச்சாட்டுகள் முறையிடப்பட்டுள்ளன. இதற்காக அவர் 60 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைதண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
சிண்டி கிளிப்டன் கடந்த ஏபர்ல் மாதம் முதல் ஜுலை மாதம் வரை 11 சிறுவர்களுடன் பாலியல் தொடர்பை வைத்துக்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேற்படி பெண் தனது இல்லத்தில் வைத்து மது அருந்திய இளம் சிறுவர்களுடன் பாலியல் உறவுக்கொண்டுள்ளாரென புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதிகமான சிறுவர்கள் மேற்படி ஆசிரியையின் பதின்ம வயது மகளின் நண்பர்களாவர்.
இடைநிலை பாடசாலையொன்றின் புகழ்பெற்ற வாசிப்பு ஆசிரியையான இவர் அப்பாடசாலையை சேர்ந்த 14 முதல் 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுடன் குற்றம் புரிந்துள்ளார்.
குறித்த பாடசாலையிலிருந்து கிளிப்டன் மீது தகாத நடத்தை குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றபின் பொலிஸார் கடந்த ஓகஸ்ட் மாதம் விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
மேற்படி பெண்ணின் வழக்ரைஞரான பிளெக் பேலின,; கிளிப்டன் விவாகரத்து பெற்ற பெண்ணென்றும் கடினமாக உழைக்கும் ஆசிரியை எனவும் அவர் தேவாலயத்தில் நம்பிக்கைக்குரியவரென்றும் அவரது சமூகத்தில் நன்மதிப்பை பெற்ற பெண்ணென்றும் வாதிட்டுள்ளார்.
டிப்டொன் பிராந்திய பாடசாலைகள் இயக்குநர் வில்லியம் பிப் விடுத்துள்ள அறிக்கையில், "இவ்வாசிரியை மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமைக் குறித்து நாங்கள் வெளிப்படையாகவே கவலையடைந்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
கிளிப்டன் 40,000 அமெரிக்க டொலரின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கெதிராக 53 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு நடைபெறுகிறது.
ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஸ்டெஸி சூகலர் (வயது 33) என்பவருக்கு 5 மாணவர்களுடன் பாலியல் உறவை வைத்துக்கொண்ட குற்றத்திற்காக கடந்த வாரம் 4 வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
42 minute ago
2 hours ago
lankan Thursday, 10 November 2011 11:23 PM
கரநாசம்
Reply : 0 0
ummpa Thursday, 10 November 2011 11:32 PM
நாகரிகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகிறிர்கள். ஆனால் நீங்கள் எல்லாம் காட்டுவாசிகள். நாங்கள் (ஆசியான்) இப்படி குற்றம் புரிந்தால் உங்கள் பத்திரிகையும் தொலைக்காட்சியும் உங்கள் UN வும் மனிதஉரிமை மீறலும் போட்டிகட்டிக்கொண்டு வீதிக்கு வந்துவிடுவீர்கள். முதல் எங்களைப் பார்த்து படிங்கோ !
Reply : 0 0
ஓட்டமாவடி ஜெமீல் Friday, 11 November 2011 12:26 AM
சரியாகச் சொன்னீர்கள், உண்மையில் சிறந்த விழுமியங்களுடனான நாகரிக சமுதாயங்கள் உலகில் தோன்றி இன்று வரைக்கும் வழிகாட்டுகின்றன. உதாரணம்: இந்து நாகரிகம், நைல் நதி நாகரிகம், இஸ்லாமிய நாகரிகம் என்று சொல்லலாம். ஆனால் கேடுகெட்ட பாலியல் தூண்டல்களையும் வர்த்தக நோக்கையும் தொழில்நுட்பம் போன்ற கவர்ச்சிகளையும் மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டு இன்றைய உலகில் வெளிப்பகட்டைக் காண்பித்துக்கொண்டிருக்கும் மேற்கத்தேய மற்றும் அமெரிக்க கலாச்சாரங்களுக்கு உண்மையான வரலாரே கிடையாது.
Reply : 0 0
hilmee Friday, 11 November 2011 09:36 PM
ஓட்டமாவடி ஜமீல் சொன்னது ஒ.கே
Reply : 0 0
ibnu aboo Saturday, 12 November 2011 05:27 AM
அனைத்து மோசமான காரியங்களுக்கும் முன்னோடி தேசம் அமெரிக்கா என்றால் மிகையாகாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
2 hours ago