2025 மே 13, செவ்வாய்க்கிழமை

16 வயது மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியைக்கு சிறை தண்டனை

Kogilavani   / 2013 நவம்பர் 29 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

லண்டனின் தென்பகுதியில் உள்ள கல்லூரியில் நாடக கற்கைநெறியின் பிரதி தலைவராக செயலாற்றும் ஜென்டி கிலினர் என்ற 33 வயதுடைய ஆசிரியைக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆசிரியையிடம் மாணவர் ஒருவர் நீங்கள் மிகவும் வெண்மையாகவும் அழகாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதனைக் கேட்ட ஆசிரியை அம்மாணவனுக்கு கைச்செயின் ஒன்றை பரிசளித்துள்ளார்.

பின்னர், அம்மாணவனுக்கு தொடர்ந்து குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்ப ஆரம்பித்துள்ளார்.

ஒரு நாள் அம்மாணவனுக்கு மேலதிக வகுப்பொன்றை ஏற்பாடு செய்து தனது வீட்டிற்கு   அழைத்துச்சென்ற அவ் ஆசிரியை, பாதுகாப்பற்ற முறையில் அம்மாணவனுடன் பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார்.

மாணவனின் கவனத்தை திசை திருப்பிய ஆசிரியை அதன்பின்பு பலமுறை அம்மாணவனுடன் தனது நேரத்தை செலவிட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவன், குறித்த கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • jinna jiyas Sunday, 01 December 2013 03:28 PM

    இறைவா, எல்லாம் உன் கையில்... இறைவனிடம் யாரும் தப்ப முடியாது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X