Kogilavani / 2011 ஜூலை 08 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இசை விழா ஒன்றில் பார்வையாளர்கள் கூட்டத்துடன் நிர்வாணக் கோலத்தில் இணைந்துக்கொண்ட திறந்த வெளியரங்கு நடிகை நடிகர்களை பொலிஸார் இழுத்துச் சென்ற சம்பவமொன்று போலந்தில் இடம்பெற்றுள்ளது.
போலந்தின் பொஸ்னான் பிராந்தியத்தில் இடம்பெற்ற 'மால்டா இசை விழாவில் பிரான்ஸை சேர்ந்த இசை நடன குழுவொன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அக்குழுவினர் மேடையை அலட்சியம் செய்துவிட்டு, இசை ஒலிக்க ஆரம்பித்தவுடன் ஆடைகளை களைந்துவிட்டு பார்வையாளர்கள் மத்தியில் சென்று நடனமாடத் தொடங்கினர்.
அதனால் அதிர்ந்துபோன பார்வையாளர்கள் சிலர், பொலிஸ் அவசர இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு தகவல் வழங்கினர். அயைடுத்து பொலிஸார் அங்கு விரைந்து மேற்படி குழுவினரை கைது செய்தனர். பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அப்பிராந்திய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
'அவர்கள் நடிகர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை, அங்கு மேடையேற்றமோ நடிப்போ இருக்கவில்லை. அவர்கள் பைத்தியங்களோ என நாங்கள் எண்ணினோம்' என பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அக்குழு பொது இடத்தில் மிகவும் கீழ்த்தரமாக நடந்துக்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago