2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

நிர்வாண கோலத்தில் காளையை அடக்க முயன்றவர் கைது

Kogilavani   / 2011 ஜூலை 11 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பெய்னில் நடைபெற்ற காளை அடக்கும் போட்டியில் நிர்வாணக்கோலத்துடன் கலந்துகொண்ட ஒரு நபரை பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாம்ப்லோனா நகரில் கடந்த 4 நாட்களாக இடம்பெற்று வரும் 'சென் பேர்மின்' எனும்  காளைகளை அடக்கும்போட்டியில் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டு தமது திறமையை காட்டி வருகின்றனர்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற  போட்டியில் நபரொருவர் நிர்வாணக்கோலத்துடன் கலந்துக்கொண்டார்.
ஆனால், அவரை இளம் காளையொன்று தூக்கி எறிந்தது.

இப்போட்டியின்போது இந்நபரின் முகத்தில் சிறுகாயங்கள் ஏற்பட்டன. எனினும் பொலிஸார் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்போட்டியின்போது 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .