Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேர்பியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மணமகள்களுக்காக மலர்களிலான பாதணிகளை தயாரித்து விநியோகிக்கிறார்.
'ஒவ்வொரு பெண்ணும் அவரது திருமணத்தின்போது இளவரசியாக இருக்கவே விரும்புவர். எனவே அவர்கள் தம்மை அவ்வாறு உணரவேண்டும் என்பதற்கான ஒரு வழியாக அவர்களுக்காக மலர்களால் பாதணிகளைத் தயாரிக்க ஆரம்பித்தேன்' என நிகோலா மிஹைலோவிக் எனும் 29 வயதான இப்பெண் கூறியுள்ளார்.
மலர்விற்பனை நிலையமொன்றை நடத்தி வருபவர் இவர்.
'நான் இதனை செய்வதற்கு ஆரம்பித்தவுடன் எனது நண்பர்களும் ஏனைய மக்களும் இத்தகைய பாதணிகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்' என அவர் கூறுகிறார்.
இவர் திருமண வைபவங்கள் நடைபெறும் இடத்திற்கு தானாகவே சென்று இப்பாதணிகளை தயாரித்து வழங்குகிறார். மணமகள் அணியும் வரை அப்பாதணியிலுள்ள மலர்கள் வாடிவிடாமல் இருப்பதற்காக பற்றரியினால் இயங்கும் சிறிய குளிர்சாதன பெட்டியொன்றில் அப்பாதணியை கொண்டுசெல்கிறார்.
'எனக்கு உலகெங்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மற்றும் அண்மையில் எகிப்தில் நடைபெற்ற திருமணமொன்றுக்கு அங்குள்ள காலநிலையை கருத்திற்கொண்டு, அதிகுளிருட்டியொன்றில் வைத்து ஒரு ஜோடி பாதணிகளை அனுப்பிவைத்தேன்' என்று அவர் தெரிவித்தார்.
3 minute ago
23 minute ago
27 minute ago
Anwer Noushard Monday, 22 August 2011 05:35 PM
மலர் பாதங்களுக்கு எதற்கு மலர் பாதணி?
Reply : 0 0
RILSA Sunday, 28 August 2011 07:59 PM
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
23 minute ago
27 minute ago