2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முன்னாள் மனைவிக்கு பாறாங்கல்லை 'பரிசளித்த' மேயர் நெருக்கடியில்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் மாநகர மேயர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக 20 தொன் எடையுள்ள பாறையொன்றை அப்பெண்ணின் வீட்டுவாசலில் வைத்ததால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

கனடாவின் மொன்ரீயலுக்கு அருகிலுள்ள தியோடர்ட் அக்டன் எனும் நகரின் மேயர் டெனி லெரிவியர் என்பவரே இவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

அவர் தனது முன்னாள் மனைவி இஸபெல்லின் வீட்டிற்கு செல்லும் பிரத்தியேக பாதையில்  இந்த கற்பாறையை வைத்துள்ளார்.

இக்கற்பாறை மீது இளஞ்சிவப்பு நிறத்தில் 'போவ்' ஒன்று கட்டப்பட்டிருந்தது. 'பிறந்த நாள் வாழ்த்துக்கள் இஸபெல்' என ஸ்பிறே பெயின்ற் மூலம் எழுதப்பட்டிருந்தது.

தாங்கள் இருவரும் பிரிந்து 3 வருடங்களாகுவதாகவும் அப்போதிருந்து லெரிவியர் தனக்கு தொல்லைகொடுப்பதாகவும் பொலிஸாரிடம் இஸபெல் தெரிவித்துள்ளார்.

லெரிவியருக்குச் சொந்தமாக காணி சுத்தமாக்கும் நிறுவனமொன்று உள்ளது. இந்நிலையில் பாரம்தூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி அவர் மேற்படி கற்பாறையை கொண்டுசென்று அப்பெண்ணின் வீட்டுக்கு முன்னால் வைத்துள்ளார்.

இது குறித்து லெரிவியர் தெரிவிக்கையில், 'அவளது ரசனைக்கு ஏற்ற வித்தில் அவள் இதுவரை பெரிய பாறாங்கல்லை பார்த்திருக்க மாட்டாள். தற்போது அது அவளிடம் உள்ளது. அவளது வாழ்வில் பெறக்கூடிய மிகப்பெரிய கல் இதுதான்'  என்று கூறியுள்ளார்.

இப்பாறாங்கல்லை தற்போது அவர் அங்கிருந்து அகற்றிவிட்டார். எனினும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதா என்பது குறித்து பொலிஸார் ஆலோசித்து வருகின்றனர்.


  Comments - 0

  • mohamed writing Sunday, 21 August 2011 11:21 AM

    நம்ம நாட்டிலும் எத்தனை பெண்கள் தலையில் பாறாங்கல்லை சுமக்கிறார்கள் .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .