2025 மே 14, புதன்கிழமை

ஐஸ் மனிதனின் உறைய வைக்கும் சாதனைகள்

Kogilavani   / 2011 டிசெம்பர் 22 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நெதர்லாந்தைச் சேர்ந்த விம் ஹோவ் என்பவர் உறை பனியில் பல சாதனைகளை நிலைநாட்டி புகழ்பெற்றவர். இவர் பூச்சியம் பாகைக்கு குறைந்த வெப்ப நிலையில் நின்று எட்டுத் தடவைகள் உலக சாதனைகளை நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

52 வயதான விம் ஹோவ், கடந்த இரண்டு வருடங்களுக்குமுன் கட்டைக் காற்சட்டை மாத்திரம் அணிந்தவாறு - 20 பாகை வெப்பநிலையில் அரைமரதன் ஓட்டப்போட்டியை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

துணிச்சல் மிக்க மேற்படி நபர் 2008 ஆம் ஆண்டு 73 நிமிடம் 48 விநாடிகள் ஐஸ் குளியலில் மேற்கொண்டு சாதனை படைத்தார்.

விம் ஹோவின் புகைப்பட நபர் ஹெனி பூர்கர்ட், விம் ஹோவின் சாதனைக்  காட்சிகளை புகைப்படங்களாக தொகுத்துள்ளார்.

விம் ஹோ, கடந்த 25 வருடங்களுக்கு முன் ஆம்ஸ்டர்ம் பூங்காவில் உறை பனியில் நிர்வாணக் கோலத்துடன் யோகா செய்த காட்சியை படம் பிடித்த போது அவருக்கு அறிமுகமானவர் ஹென்னி பூர்கட்.

இது குறித்து ஹென்னி பூர்கட், தெரிவிக்கையில், விம் ஹோ பனிக்காலத்தின் மத்தியில் ஆம்ஸ்டர்டம் பூங்காவில் வழக்கமாக காணப்படுவார். உறைந்த ஏரியின் மீது அமர்ந்து புத்தகம் வாசிப்பது அவரின் வழக்கம் என்று கூறியுள்ளார்.

இவ்விருவரும் துருவப் பிரதேசங்கள், பாரிய பனிப் பாறைகள் மற்றும் விசாலமான உறைந்த ஏரிகளுக்கு பயணம் செய்து, சதுரங்கம் விளையாடியுள்ளனர்.

'நான் இச்சதுரங்கப் போட்டிகளில் வென்றதில்லை. அது எனது விளையாட்டு அல்ல. நான் பனியில் உறைந்து இறந்துபோகாமல் இருப்பது குறித்துதான் கவனம் செலுத்துவேன்' என பூகர்ட் தெரிவித்துள்ளார்.

விம் ஹோ, அமெரிக்காவுக்குச் சென்று உளவியல் திடநிலை பயிற்சிகளையும் பலருக்கு வழங்கியுள்ளார்.

'விம் தனது உடலை சிறுவயதில் இருந்தே பழக்கப்படுத்தி வைத்துள்ளார். அவர் மனவலிமை குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டவர்' என பூர்கெட் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .