2025 மே 14, புதன்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் நிர்வாணமாக்கி காட்டில் கைவிட்டதாக குற்றச்சாட்டு

Kogilavani   / 2011 டிசெம்பர் 22 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெலாரஸ் தலைநகரான மின்ஸ்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனைச் சேர்ந்த பெண்ணிய வாதிகள் மூவரை பொலிஸார் காடொன்றுக்கு கொண்டு சென்று  நிர்வாண கோலத்தில் விட்டுச் சென்றதாக  அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மின்ஸ்க் நகரில் இப்பெண்கள் மூவரும் டொப்லெஸ் கோலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கைது செய்த பொலிஸார்  அப்பெண்களின் கண்களைக் கட்டி,  காட்டிற்கு கொண்டு சென்றதாகவும் பின்னர்  அப்பெண்களின் ஆடைகளைக் களைந்துவிட்டு,   உடலில் எண்ணையை ஊற்றிவிட்டுச் சென்றதாகவும் பெண்ணியவாத குழுவினர் அவர்களின் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

பெலரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூகாசென்கோவ் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அடிக்கடி டொப்லெஸ் கோலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது இவர்களின் வழக்கமாகும்.

இளம் பெண்களை, சமூக விழிப்புணர்வு, செயற்பாடு, புத்திகூர்மை, கலாசார அபிவிருத்தி அடிப்படையில் ஒன்றிணைய வலியுறுத்துவதற்காக தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக  அக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் கண்களைக் கட்டி அவர்களை காட்டிற்கு கொண்டு சென்ற பொலிஸார், அவர்களுக்குத் தீமூட்டப் போவதாக அச்சுறுத்தியதுடன்  அவர்களது தலைமயிர்கள் கத்தரியினால் வெட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அப்பெண்கள் எந்த ஆவணங்களுமின்றி, நிர்வாணக்கோலத்துடன் காட்டில் கைவிடப்பட்டதாகவும் பின் அவர்கள் சிறிய கிராமம் ஒன்றிற்கு நடந்து சென்றதாகவும் மேற்படி பெண்ணியவாதிகள் குழு தெரிவித்தள்ளது.

மின்ஸ் நகரிலுள்ள உக்ரேனிய தூதரகம், இப்பெண்களின் தகவலை  உறுதிப்படுத்த மறுத்துள்ளது. எனினும் இதுகுறித்து இராஜதந்திரியொருவர் விசாரணை நடத்தவுள்ளதாக அத்தூதரகம் தெரிவித்துள்ளது.

இப்பெண்கள் ஆத்திரமூட்டும் வகையில் செயற்பட்டதாக பெலாரஸ் அரசாங்க பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற பெலாரஸ் ஜனாதிபதித் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என 80 சதவீதமான சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற 6 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Risvi Friday, 23 December 2011 06:03 PM

    தேவையா இது?

    Reply : 0       0

    Vasanthi Friday, 23 December 2011 09:17 PM

    உங்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை

    Reply : 0       0

    Raja D Friday, 23 December 2011 11:16 PM

    இது தவறு

    Reply : 0       0

    Ealavalan Saturday, 24 December 2011 03:00 AM

    ithu manitha urimai meerum செயல்

    Reply : 0       0

    Rush Sunday, 25 December 2011 05:29 PM

    ஜனநாயகம் இதுதானா ?

    Reply : 0       0

    s.m.m.abdullah Sunday, 25 December 2011 05:39 PM

    நாகரீகம் என்று கூறும் இவர்களின் ஈன செயல். இதற்கு காரணம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறும் இது மனித உரிமை என்று கூறும் ஐரோப்பியர்களின் இந்த செயல் அவர்களே தங்கள் தலைல மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் செயல். சரியான நாகரீகம் தெரியாத காரணத்தால் முழு சமூகமும் சீரழிகின்றது.

    Reply : 0       0

    raja Monday, 26 December 2011 12:00 AM

    pen adimai ethu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .