2025 மே 14, புதன்கிழமை

பாலியல் உறவுகொண்டு, விபசார நடவடிக்கைகளை முறியடிக்கும் விபசார இன்ஸ்பெக்டர் பதவி

Kogilavani   / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் புலனாய்வுத்துறை நிறுவனமொன்று 'விபசார இன்ஸ்பெக்டர்' பதவிகளுக்கு ஆட்களை திரட்டுவதற்காக விளம்பரமொன்றை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத விபசார விடுதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உதவுவதற்கே இவ்வாறு ஆட்கள் திரட்டப்படுகின்றனர்.

சிட்னியில் உள்ள லியோன்ஸ்வூட் புலனாய்வு மற்றும் தடவியல் குழுவே சஞ்சிகையொன்றில் இந்த விபசார முறியடிப்பு புலனாய்வாளர்களுக்கான விளம்பரத்தை பிரசுரித்துள்ளது.
இந்த விபாசார இன்ஸ்பெக்டர்கள்  ஒரு வடத்திற்கு சுமார் 90 லட்சம் இலங்கை ரூபாவை ஊதியமாக பெற முடியும்.

விண்ணப்பதாரிகள் திருமணமாகாதவர்களாகவும் இருக்கவேண்டும். அத்துடன் இவர்கள் விபசாரத்தில் ஈடுபவடுபவர்கள் பாதுகாப்பான பாலியல் உறவுகொள்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். பின்னர்,  இந்தவிபசார நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றில் சாட்சியம் அளிக்க வேண்டும் என இப்புலனாய்வாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர் என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுக் குறித்து லியொன்ஸ்வூட்   நிறுவன  முகாமையாளர் லச்லன் ஜேர்விஸ் தெரிவிக்கையில், இந்த தொழலில் ஈடுபடுவர்கள் சந்தேகத்திடகிடமான சட்டவிரோத முறையில் விபாசார விடுதிகளுக்குச் செல்வதுடன் அங்கு பாலியல் சேவைகள் இடம்பெறுகின்றன என்பதற்கு ஆதாரங்களை திரட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

'இத்தொழில் சில வேலைகள் பாலியல்  நடவடிக்கைகளில் பங்குபற்றவும்  வேண்டியிருக்கும். ஏனெனில் அதனூடாக உறுதியான ஆதாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்' என அவர் தெரிவித்துள்ளார். சிட்டினியில் உள்ள தொழிலற்றவர்களுக்கு மத்தியில் இவ்விளம்பரம் பிரபல்யமடைந்துள்ளது.

இதுவரை எமக்கு டஸன் கணக்கிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது சிட்னியல் தொழிலை எதிர்பார்த்துள்ளோரிடையே பிரபலமான தொழிலாகும். இது ஆண்களுக்கு மிகவும் பொருத்தமான தொழில்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0

  • rahumathulla Tuesday, 07 February 2012 02:55 AM

    மிகவும் புனிதமான ஒரு தொழில் போலும் !

    Reply : 0       0

    m jaleel Tuesday, 07 February 2012 03:42 AM

    mudinthal நீங்களும் அப்ளை பண்ணுங்க ஆஸ்திரேலியாவுக்கு போகலாம்....

    Reply : 0       0

    madhu Tuesday, 07 February 2012 04:59 AM

    நானும் வாறன் ..................................ஹ ஹ ஹ

    Reply : 0       0

    kundaanthady Tuesday, 07 February 2012 12:59 PM

    விண்ணப்ப படிவங்கள் பிரபலமான புத்தகக்கடைகள் மற்றும் இன்டர்நெட் வழியாகவும் கிடைக்க ஏற்பாடு பண்ணமாட்டார்களா? தொழில் என்றால் எல்லாம் தொழில் தானே மானேஜ்மென்ட் அசிஸ்டன்ட் அண்ட் ஆசிரியர் வேலை மட்டும் தானா உத்தியோகம் ?

    Reply : 0       0

    ibnuaboo Wednesday, 08 February 2012 02:27 AM

    கரும்பு தின்ன கைக்கூலியா

    Reply : 0       0

    PUTTALAM MANITHAN Tuesday, 14 February 2012 01:51 AM

    நல்ல அருமையான தொழில் எனக்கும் கிடைக்கே வாய்ப்புண்டா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .