2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தொலைக்காட்சியை அதிக சத்தத்துடன் பார்த்த தந்தை அடித்து கொலை: மகன்மார் கைது

Kogilavani   / 2012 மார்ச் 14 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொலைக்காட்சியை அளவுக்கதிகமான சத்தத்துடன் பார்த்தார் என்ற காரணத்திற்காக தமது தந்தையை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மூன்று மகன்மாரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இந்தியாவின் சரஸ்வதி நகர் சாலஹ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

ஜிட்டேன்ரா, மஹேஷ், சோனு டாகொடே ஆகியோரே இவ்வாறு தமது தந்தையான நந்தகுமாரை தாயின் முன்னாலே அடித்து கொலை செய்துள்ளனர்.

நந்தகுமார் என்ற நபர் தொழிலின்றி வீட்டில் இருந்தபோது தமது நேரத்தை தொலைக்காட்சியை பார்வையிடுவதிலே செலவிட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஒரு நாள் இரவு தொலைக்காட்சியை அதிக சத்தத்துடன் பார்த்துகொண்டிருந்த போது மேற்படி மூவரும் தொழில் செய்யாமல் தொலைக்காட்சி பார்ப்பதிலே நேரத்தை செலவிடுவதாக கூறி நந்தகுமாரை நோக்கி சத்திமிட்டுள்ளனர். அதற்கு நந்தகுமார் தான் வேலைசெய்ய வேண்டியதில்லையென தெரிவித்துள்ளார்.

இதன்போது, மேற்படி சகோதரர்கள் மூவரும் தடிகள் மற்றும் ஏனைய பொருட்களை கொண்டு நந்தகுமாரை தாக்கி கொலை செய்துள்ளதாக நகர பொலிஸ் கண்காணிப்பாளர் ராஜேஸ் பஹடோரியா தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின்போது நந்தகுமாரின் மனைவியும் வீட்டில் இருந்துள்ளார்.

இதேவேளை, நந்தகுமாரை மீட்பதற்காக வந்த அவரின் சகோதரர்கள் இருவரும் மேற்படி மூன்று சகோதரர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
 


  Comments - 0

  • haleemraja Thursday, 15 March 2012 07:43 AM

    இதுதான் இந்தியா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X