2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பதின்மர் வயது மாணவர்களுடன் பாலியல் தொடர்புகொண்ருந்த ஆசிரியை நெருக்கடியில்

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் பதின்மர் வயது சிறுவர்கள் மூவருடன் பாலியல் தொடர்பை வைத்திருந்த குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியை ஒருவர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். இவர் மேற்படி மாணவர்களுடன் பாலியல் தொடர்பை வைத்திருந்த ஒரு தடவை அதே கட்டிலில் அந்த ஆசிரியையின் மகளும் உறங்கிக் கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்தா சிஸ்மோர் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறான நிலையை எதிர்கொண்டுள்ளார். 

இவர் குறித்து  பதின்மர் வயதான  சிறுவன் ஒருவன் தெரிவிக்கையில், ஒரு முறை பாலியல் உறவின் போது கழுத்தில் கடிபட்டதால் அந்த காயத்தை மறைப்பதற்காக ஸ்வெட்டர் ஒன்றை அணிந்துகொண்டு பாடசாலைக்கு வந்தேன் எனத் தெரிவித்துள்ளான்.

ஆர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மேற்படி பெண், மதுபான விருந்தொன்றின்போது  பதின்மர் வயதான இரு சிறுவர்களுடன் அவரது படுக்கையறையில் பாலியல் உறவு கொண்டாரென மற்றுமொரு சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதேவேளை மேற்படி விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாக 25 சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். தமது நண்பர்களில் குறைந்தது மூவராவது மேற்படி ஆசிரியையுடன் பாலியல் தொடர்பை கொண்டிருந்ததை தாம் அறிந்திருந்ததாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களின் வயது விபரம் வெளியிடப்படவில்லை. எனினும் அவர்கள் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த ஆசிரியை பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணைகள் தொடர்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X