2025 மே 14, புதன்கிழமை

ஆணுறை அடிப்படையில் விவகாரத்துக்கு அனுமதி வழங்க நீதிபதிகள் மறுப்பு

Kogilavani   / 2012 மே 04 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆணுறையின்றி உடலுறவு கொள்வதற்கு தனது மனைவி மறுப்பதால் விவாகரத்து கோரி நபரொவர் தாக்கல் செய்த மனுவை இந்தியாவின் மும்பை மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குடும்பத்தின் பொருளாதார நிலை பலவீனமாக உள்ளதால் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு தனது மனைவி மறுப்பதாகவும் இதனால் ஆணுறையின்றி பாலியல் உறவு கொள்வதற்கு மனைவி மறுப்பதாகவும் மேற்படி நபர் தனது விவகாரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ஆணுறை விவகாரத்தின் அடிப்படையில் விவகாரத்துக்கு அனுமதி வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். சமையல், சலவை என்பற்றில் மனைவிக்கு திறமையில்லை என்பனவும் விவகாரத்துக்கு அடிப்படையாக முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் திருமணத்திற்கு முன்னர் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 'அப்பெண் தனது குழந்தைக்கு சிறந்த வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்புகிறார். இது  ஒரு இரு தரப்பு தீர்மானம், கணவர் மாத்திரம் வலியுறுத்த முடியாது' என நீதிபதிகள்  தெரிவித்தனர்.

இத்தம்பதி 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் செய்திருந்தனர். அவ்வருடம் ஜுன் மாதம் அம் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனது கட்சிக்காரர் படித்த, தொழில்புரியும் பெண்ணொருவரை மனைவியாக பெற விரும்புவதாகவும் அப்பெண் வீட்டு வேலைகளையும் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் எனவும் விரும்புவதாகவும் மனுதாரரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஆனால்  பெண் ஒரு அடிமையல்ல என நீதிபதி மஜ்முதார் கூறினார். திருமணத்திற்குமுன் தம்பதிகள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வேண்டும் என மற்றொரு நீதிபதியான அனூப் மொஹ்தா கூறினார்.

பெற்றோரால் நிச்சயிக்கப்படும் திருமணங்களின்போது, திருமணத்திற்கு முன் பல்வேறு விடயங்களை பெற்றோர் ஆராய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .