2025 மே 14, புதன்கிழமை

மனிதர்களின் கண்ணீரிலிருந்து தயாரிக்கப்பட்ட உப்புகள் லண்டனில் விற்பனை

Kogilavani   / 2012 மே 29 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர்களின் கண்ணீரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல வகையான உப்புகள் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களிடம் ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீரின் வகைகளினால் இந்த உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஹொக்டன் தெரு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துக்கத்தினால் ஏற்படும் கண்ணீர், தும்மும் போது ஏற்படும் கண்ணீர், வெங்காயம் வெட்டும்போது ஏற்படும் கண்ணீர், சிரிப்பின் போது ஏற்படும் கண்ணீர், கோபத்தின் போது ஏற்படும் கண்ணீர் என ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீர் மூலம் சுமார் 7 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உப்புகளும் மாறுபட்ட சுவை கொண்டவை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மனிதர்களின் கண்ணீரிலிருந்து உப்பு உற்பத்தி செய்யப்படுவது நூற்றாண்டு பழைமையான கலை என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .